இனிமேல் ஹீரோவாக மட்டுமே நடிப்பது என்றும், நெருங்கிய நண்பர்களின் படங்களில் மட்டுமே காமெடி பண்ணுவது என்றும் நடிகர் சந்தானம் முடிவெடுத்துள்ளாராம்.
தமிழ் சினிமாவில் இன்றைக்கு முதல் நிலை காமெடியனாக உள்ளவர் சந்தானம். ஆனால் இவருக்கு ஹீரோ ஆசை வந்துவிட்டதால், காமெடி பண்ணுவதைக் குறைத்து வருகிறார்.
கண்ணா லட்டு தின்ன ஆசையா, வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படங்களுக்குப் பிறகு இனிமே இப்படித்தான் படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். விரைவில் இந்தப் படம் வெளியாக உள்ளது.
இந்தப் படத்துக்குப் பிறகு தொடர்ந்து ஹீரோவாக நடிக்க முடிவு செய்துள்ள சந்தானம், நெருங்கிய நண்பர்களான உதயநிதி, ஆர்யா போன்றவர்கள் கேட்டால் மட்டும் நகைச்சுவை வேடங்களில் நடிப்பது என முடிவு செய்துள்ளாராம்.
அப்படியா மச்சி ,இனிதான் உன் படம் தோல்வி அடிந்த நீ காணாமல் போக போறே மச்சி
தெரிந்த தொழிலை விட்டவனும் கெட்டான்,தெரியாத தொழிலை தொட்டவனும் கெட்டான்.
கவுண்டமணி பாணியை அப்படியே காப்பியடித்து அவனே, இவனே, வாடா போடா என்று சிறியோர் முதல் பெரியோர் வரை அனைவரையும் ஏகவசனத்தில் திட்டி அதற்கு பெயர் நகைச்சுவை என பெயர் சூட்டி பிழைப்பு நடத்தி வந்த இந்த ஆசாமிக்கு இனி இறங்கு முகம்தான்.
ஆசை யாரை விட்டது, இந்த சந்தானம் இன்னொரு கவுண்டமணி! வயதில் மூத்தவர்களை மரியாதை இல்லாமல் கிண்டலடிப்பது, அவமரியாதையாகப் பேசுவது, அடிப்பது அதிலும் அப்பாக்களை அவமதிப்பது என
சினிமா ரசிகர்களுக்கு குறிப்பாக இளையோர்க்கு ஒரு தீய முன்னோடி. ஆரம்பத்தில் தந்தை என்றாலே ஒரு பயமும் மரியாதையும் நிறைந்திருந்தது. இப்போதோ அது பல வகைகளில் கானல் நீராகிப் போகின்றது. அதற்கு இதுவும் மிகமுக்கிய காரணம். நகைச்சுவையில் கொட்டிய அவமரியாதைகள் கொஞ்சம், ஹீரோவாகி இன்னும் என்னென்ன கண்ட்ராவியெல்லாம் பாக்கி இருக்கிறதோ அதையும் பார்க்கிற கொடுமை இந்த சினிமா ரசிகர்களுக்கு.