இசைப்பிரியா என்ற பெண் ஊடகவியலாளருக்கு கொடுமை திரையிட அனுமதி மறுப்பதா? பெண்கள் அமைப்பு

இசைப்பிரியாவின் படுகொலையினை மையமாக வைத்து “போர்களத்தில் ஒரு பூ” என்ற திரைப்படத்தினை கணேசன் அவர்கள் தயாரித்துள்ளார் . இப் படத்திற்கு கடந்த சில நாட்களுக்கு முன் தணிக்கை குழு தடை விதித்துள்ளது. இவ் தடையை கண்டித்து சென்னையில் பெண்கள் அமைப்பு சார்பாக பத்திரிகையாளர் சந்திப்பு இடம் பெற்றது.

இச் சந்திப்பில் அவர்கள் கூறுகையில் :-

பெண் ஊடகவியலாளருக்கு கொடுமை திரையிட அனுமதி மறுப்பதா?

இலங்கையில் நடந்த இன அழிப்புப் போரில் வடக்கு மாகாணத்தில், கலைஞராகவும் , ஊடக செயற்பாட்டாளருமாக இருந்த இளம் பெண் கைது செய்யப்பட்டு , படுகொலையானது உலகறிந்த உண்மைச் சம்பவம்!

உண்மைச் சம்பவத்தை திரைப்படமாக்கினால் பிழையா? ஐநா.மனித உரிமைக் கழகமே தனது தீர்மானங்கள் மூலம்”விசாரணை செய்யப்படும் போர்க்குற்றங்கள் ” படமாகி வரக்க்கூடாத?இந்திய அரசு இன்ரண்டு முறை ஐநா மனித  உரிமைக் கழகத்தில், இலங்கை போர்க்குற்றங்கள் மீது விசாரணை நடத்தப்பட வேண்டுமென ஆதரவு கொடுத்த நிகழ்வுகள் படமாகி வரக்கூடாத?

உலக திரைப்படங்களில் எதனை “போர் நடந்த நிகழ்வுகள் ” வெளிவந்துள்ளன?

“போர்க்களத்தில் ஒரு பூ” என்ற படம் என்ன தவறு செய்தது? ஒரு இளம் பெண் பாதிக்கப்பட்டதை சித்தரித்து மக்கள் மத்தியில் கொண்டு வர வேண்டிய மனித உரிமைக் கடைமைதானே? உண்மைக்களைத் தெரிந்து கொள்ள மக்களுக்கும் “அறியும் உரிமை” வேண்டுமல்லவா?

“சான்றிதழ்” தருவது தானே “தணிக்கை குழு” பணி? சான்றிதழ் மறுப்பது எப்படி சரி? ” பெண்கள் மீதான கொடுமையை” சித்தரிக்க இது போன்ற படங்களுக்கும் “சான்றிதழ்” அளிக்க வேண்டுகிறோம்!

பல சமூக சிந்தனையாளர்கள் இந்த வேண்டுகோளில் கையெழுத்திட்டு இந்தப் படத்திற்கு சான்றிதழ் வழங்கக் கோரியுள்ளனர்.

-பெண்கள் அமைப்பு-

-http://www.pathivu.com


TAGS: