சீனா முன்னால் அரவணைத்து பின்னால் குத்தும் பழக்கம் கொண்டது என்ற குற்றச்சாட்டை மீண்டும் நிரூபித்து உள்ளது. தெற்கு சீனகடல் பகுதி, சர்ச்சைக்குரியது என்று இந்தியா ஆய்வுபணி செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ள சீனா, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் மேம்பாட்டு பணிகளை செய்வது சரியென நியாப்படுத்தி உள்ளது.
சீனா எச்சரிக்கை
இந்தியா வியட்நாமுடன் பொருளாதார மற்றும் பாதுகாப்பு துறையில் இணைந்து பணியாற்றும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளது. வியட்நாம் கண்ட அடுக்குப்பகுதியில் இந்தியாவின் ONGC விதேஷ் லிமிடெட் எண்ணெய் மற்றும் எரிவாயு ஆய்வு பணியில் ஈடுபட்டு உள்ளது. ஆனால் தெற்கு சீனகடலில் இந்தியா எங்களுடைய அனுமதியின்றி எண்ணெய் மற்றும் எரிவாயு ஆய்வு பணியை மேற்கொள்ளக்கூடாது என்று சீனா எச்சரிக்கை விடுத்தது.
“ எண்ணெய் மற்றும் எரிவாயு ஆய்வு பணிக்கு சீனாவிடம் அனுமதியை பெறவேண்டும்,” என்று சீன வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்தது.
தெற்கு சீன கடல் பகுதியில் சீனாவுக்கும், வியட்நாம் உள்ளிட்ட நாடுகளுக்கும் இடையே பிரச்சினை நீடித்து வரும் நிலையில், அங்குள்ள சர்ச்சைக்குரிய ஸ்பிரேட்லி தீவில் கட்டுமானப்பணிகளை சீனா மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.
‘சி.பி.இ.சி.’ திட்டம்
இந்தியாவின் எதிர்ப்புக்கு மத்தியிலும், சீனா-பாகிஸ்தான் இடையே பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் வழியாக 3 ஆயிரம் கி.மீ. தொலைவில், 46 பில்லியன் டாலர் (சுமார் ரூ.2 லட்சத்து 94 ஆயிரத்து 400 கோடி) மதிப்பில் ‘சி.பி.இ.சி.’ என்னும் பொருளாதார சாலை அமைக்கும் திட்டத்தை சீனா தொடங்கி உள்ளது.
தெற்கு சீனகடல் பகுதி, சர்ச்சைக்குரியது என்று இந்தியா ஆய்வுபணி செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்துஉள்ள சீனா, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் (இந்தியாவிற்கு சொந்தமான் பகுதி) மேம்பாட்டு பணிகளை செய்வது சரியென நியாப்படுத்தி உள்ளது. ‘சி.பி.இ.சி.’ என்னும் பொருளாதார சாலை அமைக்கும் திட்டம் வாழ்வாதாரத்திற்கானது என்றும் சீனா குறிப்பிட்டு உள்ளது.
விளக்கம்
தெற்கு சீனகடல் பகுதியில் இந்தியா மற்றும் சீனாவிற்கு சுதந்திரம் உள்ளது. இவ்விவகாரத்தில் எந்தஒரு வேறுபாடும் கிடையாது என்று சீனாவின் வெளியுறவுத்துறை, ஆசிய விவகாரங்கள் துறையின் துணை இயக்குநர் ஜெனரல் ஜிலியன் தெரிவித்து உள்ளார்.
தெற்கு ஆசிய அண்டையநாடுகளுடன் சர்ச்சைக்குள் இருக்கும் பகுதிகளில் சீனா நிறுவனங்கள் சென்றால் இந்தியா எதிர்ப்பு தெரிவிக்கும். அதேபோன்றே வியட்நாமால் தெற்கு சீனகடல் பகுதியில் சர்ச்சைக்குரிய பகுதில் உரிமை கொண்டாடப்படும் இடத்தில் இந்திய நிறுவனம் ஆய்வு பணியில் ஈடுபட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளது என்று விளக்கம் அளித்துஉள்ளார்.
ஆனால் தெற்கு சீனகடல் பகுதியில் இந்தியா ஆய்வு பணியில் ஈடுபட்டது, முற்றிலும் வணிகரிதியிலான திட்டம் ஆகும், மாறாக அரசியல்மயமாக்கப்படுகின்ற வேண்டிய அவசியமில்லை என்று இந்தியா பதிலடி கொடுத்தது.
நியப்படுத்துகிறது
இந்தியாவின் ஆய்வு பணிக்கு எதிர்ப்பு தெரிவித்துஉள்ள சீனா, ஆக்கிரமிப்பு காஷ்மீர் வழியாக சீனாவிற்கு ‘சி.பி.இ.சி.’ என்னும் பொருளாதார சாலை அமைக்கும் திட்டத்தை நியாப்படுத்தி உள்ளது.
“இவ்விவகாரத்தில் இந்தியா தரப்பிலான கவலை எங்களுக்கு தெரியும், இந்த திட்டங்கள் அரசியல் திட்டங்கள் கிடையாது. இவை அனைத்தும் மக்களின் வாழ்வாரத்திற்கானது. இது சீனாவின் வணிக ரீதியிலான நடவடிக்கை கிடையாது,” என்று ஜிலியன் தெரிவித்து உள்ளார். பிராந்தியம்(ஆக்கிரமிப்பு காஷ்மீர்) தொடர்பான பிரச்சனையை இருதரப்பும் அமைதியான முறையில் தீர்த்துக்கொள்ள வேண்டும் என்றே சீனா வலியுறுத்தி வருகிறது.
எது சரி, எது தவறு என்று நான் பேசவில்லை. நான் எங்களுடையை நிலைப்பாட்டை தெளிவுபடுத்த முயற்சி செய்கிறேன். எங்களுக்கு உங்களுடைய கவலை தெரியும். நாங்கள் உங்களுடைய தரப்பை எங்களுடைய நிலையில் இருந்து தொடர்பு கொள்ள முயற்சி செய்கிறோம். என்று அவர் கூறியுள்ளார்.
இந்தியா எதிர்ப்பு
ஆக்கிரமிப்பு காஷ்மீர் வழியாக சீனாவிற்கு ‘சி.பி.இ.சி.’ என்னும் பொருளாதார சாலை அமைக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பதை இந்தியா இந்தவாரமும் தெரிவித்து இருந்தது.
டெல்லியில் வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் செய்தியாளர்களிடம் பேசுகையில், “இவ்விவகாரத்தில் சீன தூதர் மூலம் எதிர்ப்பு தெரிவித்தோம். பெய்ஜிங்கில் உள்ள இந்திய தூதர வழியாகவும் எதிர்ப்பு தெரிவித்தோம். இந்திய பிரதமர் எப்போது சீனா சென்றாரோ அப்போதும் பிரதமர் உறுதியாக பேசினார். இது எங்களுக்கு ஏற்றுக் கொள்ள முடியாதது என்பதை பிரதமர் மோடி சீனாவிடம் தெளிவாக தெரிவித்தார். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் வழியாக பாகிஸ்தான் – சீனா பொருளாதார சாலை அமைக்கப்படுவது தொடர்பாக சீனா தரப்பில் பேசப்படுவது எங்களால் எற்றுக்கொள்ள முடியாதது என்று பிரதமர் மோடி வலியுறுத்தினார்.” என்று தெரிவித்து இருந்தார்.
-http://www.tamilcnnlk.com
சீனன் என்னிக்காவது நேர்மையாக நடந்தது உண்டா?.
இந்தியாவில் இதுவரை எந்த நாடான்ற கட்சிகளுக்கும் முதுகு எலும்பில்லை — எல்லாம் வெறும் பேச்சே– விதை இல்லா மட ஜென்மங்கள்– சுத்த பயதாங்கோளிகள் – சீனனை நம்ப முடியாது என்று எப்போதே தெரிந்து இருக்க வேண்டும்– நேரு சீனாவுக்கு வருகை தந்து இந்தியா திரும்பிய சிலநாட்களிலேயே சீனா இந்தியாவை தாக்கி எத்தனையோ சதுர மைல் நிலத்தை கைப்பற்றியது -அப்போதே தெரிந்து இருக்கவேண்டும். இப்போது குறை சொல்லி புண்ணிய மில்லை–