வறுமைக்கோட்டுக்கு கீழ் 44 கோடி மக்களை கொண்டுள்ள இந்தியா: அதிர்ச்சி தகவல்

unicef_logo_001இந்தியாவில் 44 கோடி பேர் வறுமைக்கோட்டுக்கு கீழ் இருப்பதாக யுனிசெப் ஆய்வு அறிக்கை தகவல் தெரிவித்துள்ளது.

உலகம் முழுவதும் 160 கோடி மக்கள் வறுமையில் சிக்கி வாடுகின்றனர் என்று யுனிசெப் வெளியிட்ட ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள ஆய்வறிக்கையில், உலகம் முழுவதும் 160 கோடி மக்கள் வறுமையின் பிடியில் சிக்கி தவித்து வருகின்றனர்.

தெற்கு ஆசிய நாடுகளில் ஆப்கானிஸ்தானில் தான், வறுமையில் வாடுவோரின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது.

இதற்கு அடுத்த இடத்தில் இந்தியா, வங்கதேசம், பாகிஸ்தான், நேபாளம், பூடான் மற்றும் இலங்கை ஆகியவை உள்ளன.

இந்தியாவில் குறிப்பாக பீகார், ஜார்க்கண்ட், ம.பி., உ.பி., சட்டீஸ்கர், ஒடிசா, ராஜஸ்தான், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் 44 கோடி பேர் வறுமையின் பிடியில் வசிக்கின்றனர்.

தெற்கு ஆசியாவிலேயே மிகவும் ஏழ்மையான பகுதி பீகார் மாநிலம் என்றும் தெரியவந்துள்ளது.

மேலும், இந்தியாவில் கேரளா, தமிழ்நாடு, இமாச்சல் பிரதேஷ், பஞ்சாப், மிசோராம், கோவா மற்றும் தில்லி ஆகிய மாநிலங்களில் வறுமையில் வாடுவோர் குறைவாக இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.

-http://www.newindianews.com

TAGS: