இந்தியப் பெருங்கடலுக்குள் சீனாவின் ஆதிக்கத்தை முறியடிக்க சிறிலங்கா உள்ளிட்ட நாடுகளுடன் இணைந்து இந்தியா போர்ப்பயிற்சி

cina and indiaஇந்தியப் பெருங்கடலுக்குள் சீனாவின் ஆதிக்கத்தை முறியடிக்கும் வகையில், சிறிலங்கா உள்ளிட்ட முக்கியமான ஆசிய பசுபிக் நாடுகளுடன் இந்தியா கடற்படைப் போர்ப்பயிற்சிகளை நடத்தவுள்ளது.  ரைம்ஸ் ஒவ் இந்தியா இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் சீனா தனது ஆதிக்கத்தை விரிவுபடுத்தி வருகிறது.

குறிப்பாக, தனது கடற்படையின் பலத்தை இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தை மையப்படுத்தி வலுப்படுத்தி வருகிறது.

இந்த நிலையில், சீனாவின் இந்த மூலோபாயத்தை முறியடிக்கும் நோக்கில்  இந்தியா, ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் உள்ள முக்கியமான நாடுகளுடன் இருதரப்பு கூட்டு கடற்படைப் போர்ப்பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

ஏற்கனவே பிரான்ஸ் கடற்படையுடன் இணைந்து அரபிக் கடல் பகுதியில் இந்தியா வருண என்ற கூட்டுப் பயிற்சியை கடந்த ஏப்ரல்- மே மாதங்களில் மேற்கொண்டது.

இதையடுத்து, அமெரிக்காவுடன் இணைந்து மலபார் என்ற பெயரிலும், பிரித்தானியாவுடன் இணைந்து கொங்கன் என்ற பெயரிலும்,  ரஸ்யாவுடன் இணைந்து இந்திரா என்ற பெயரிலும், இந்தியா போர்ப்பயிற்சிகளை நடத்தவுள்ளது.

அத்துடன், ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் முக்கியமான நாடுகளான, அவுஸ்ரேலியா, சிறிலங்கா, ஜப்பான், இந்தோனேசியா, தாய்லாந்து, மியான்மார், சிங்கப்பூர் ஆகிய நாடுகளின் கடற்படைகளுடன் இணைந்தும் அடுத்த சில மாதங்களில் இந்தியா போர்ப்பயிற்சிகளை மேற்கொள்ளவுள்ளதாகவும், ரைம்ஸ் ஒவ் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.

-http://www.pathivu.com

TAGS: