பிறவியிலேயே பார்வையை இழந்த தந்தை: பனைமரம் ஏறி மகள்களை படிக்கவைக்கும் வைராக்கியம்

murugaandi_001ராமநாதபுரத்தில் பிறவியிலேயே பார்வையை இழந்த தந்தை ஒருவர், பனை மரம் ஏறி, அதில் வரும் வருவாயைக் கொண்டு தனது இரு மகள்களையும் படிக்க வைத்து வருகிறார்.

ராமநாதபுரம் அருகே உள்ள கடலோர கிராமமான வெள்ளரி ஓடையில் தனி குடிசையில் மனைவி கலாவதி மற்றும் இரண்டு மகள்களுடன் வசித்து வருகிறார் முருகாண்டி.

முருகாண்டி கூறுகையில், எனக்கு பிறவியிலேயே பார்வை கிடையாது. அப்பாவும், சிறுவயதிலேயே எங்களை விட்டுப் பிரிந்து இலங்கையில் போய் நிரந்தரமாக தங்கிவிட்டார்.

அம்மாதான் பாய், கூடை முடைந்து கஷ்டப்பட்டு என்னை வளர்த்தார். ஊரைச் சுத்தி பனங்காடுகளா இருந்தால் எனக்கு பனை மரம் ஏற, பாய் முடைய, நுங்கு சீவ, வேலி அடைக்க, ஓலை கிழிக்க அம்மா பழக்கினார்.

எனவே 10 வயதில் இருந்து அம்மாவுடன் வேலைக்கும் போக ஆரம்பித்தேன்.

பின்னர் அம்மாவுக்கு வயசாகியதால், என்னை கவனிக்க முடியாமல், கல்யாணம் பண்ணி வைத்தனர்.

எனது மூத்த மகள் சிம்புரா சாலினி 12-ம் வகுப்பும், இளைய மகள் லாவண்யா 10-வதும் படிக்கின்றனர்.

என் மனைவியால சரியா நடக்க முடியாததால், மருத்துவச் செலவு, குடும்பச் செலவு இருப்பதால் எதுக்கு இரண்டு பிள்ளைகளையும் வேலைக்கு அனுப்பி விடு என்று ஊர்க்காரர்கள் சொல்கின்றனர்.

ஆனால், என் பிள்ளைகளை படிக்க வைத்து பெரிய ஆளாக ஆக்கவேண்டுமென்று வைராக்கியமாக இருக்கிறேன்.

பனை மரம் கற்பக விருட்சம். அதோட வேரில் இருந்து உச்சி வரைக்கும் அனைத்தையும் பயன் படுத்தலாம். அதனால் எனக்கு வேலைவாய்ப்பு குறையாது.

மேலும், என் ரெண்டு மகள்களும்தான் என் ரெண்டு கண்கள். அவர்கள் மூலமாகத்தான் இந்த உலகத்ததை பார்க்கிறேறேன் என்று தெரிவித்துள்ளார்.

-http://www.newindianews.com

TAGS: