கெஜ்ரிவாலின் ஒருமாத ‘கரன்ட்’ பில் 50 ஆயிரம் ரூபாயா?

kejriwalபுதுடில்லி : அனைத்து விதத்திலும் சிக்கனத்தை வலியுறுத்தும், டில்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சித் தலைவருமான அரவிந்த் கெஜ்ரி வால், மாதம், 50 ஆயிரம் ரூபாய் அளவுக்கு மின்சாரம் பயன்படுத்துவதாக புகார் எழுந்துள்ளது.

தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ், வழக்கறிஞர் விவேக் கார்க் என்பவர், டில்லி யூனியன் பிரதேச அரசிடம், முதல்வர் கெஜ்ரிவால் பயன்படுத்தும், வீடு மற்றும் அலுவலகத்தின் மின் கட்டணம் எவ்வளவு என்பதை கேட்டார். அதற்கு, ‘மாதம், 50 ஆயிரம் ரூபாய் அளவுக்கு அவர் மின்சாரத்தை பயன்படுத்துகிறார்’ என, பதில் கிடைத்தது. இந்த தகவல், ஊடகங்களில் வெளியானதும், முதல்வர் கெஜ்ரிவாலின் புகழுக்கு களங்கம் ஏற்படுமே என கருதி, டில்லி அரசு மறுக்க துவங்கியுள்ளது.

ஏனெனில், ஆட்சிக்கு வருவதற்கு முன், அனைத்து விதங்களிலும் எளிமையை பின்பற்று வோம் என அறிவித்த கெஜ்ரிவால், 45 ஆயிரம் ரூபாய்க்கு மின்சாரம் பயன்படுத்துகிறார் என செய்தி வெளியானால், அவரின், ‘இமேஜ்’ பாதிக்கப்படுமே என, அரசு கருதியது.

டில்லி யூனியன் பிரதேச அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘முதல்வர் வசிக்கும் வீட்டிற்கான மின் பயன்பாடு, மாதம், 15 ஆயிரம் என்ற அளவில் தான் உள்ளது. அலுவலக காரணங்களுக்காக, அவர் பயன்படுத்தும் பங்களாவின் மின் கட்டணம், சற்று அதிகமாக, அதிகபட்சம், 35 ஆயிரம் ரூபாய் வரை வருகிறது; முதல்வர் ஒருபோதும், 45 ஆயிரம் மின் கட்டணம் செலுத்தவில்லை.’ என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

-http://www.dinamalar.com

TAGS: