டாஸ்மாக் மதுபான வகைகளின் நச்சுத்தன்மை குறித்து ஆய்வு மேற்கொள்ள உயர்நீதிமன்றம் உத்தரவு

டாஸ்மாக் மதுபான வகைகளில் கலந்துள்ள நச்சு தன்மை குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என உயர்நீதி மன்றம் டாஸ்மாக் நிறுவனத்துக்கு உத்தரவிட்டுள்ளது.

டாஸ்மாக் மதுபானங்களில் நச்சுத்தன்மை அதிகரித்துள்ளதால் உயிரிழப்பு ஏற்படுகிறது என புகார் கூறப்பட்டதையடுத்து நச்சுத்தன்மை எவ்வளவு உள்ளது என்பது குறித்து கண்டறிய ஆய்வு மேற்கொள்ளப்பட்ட வேண்டும் என தேவராஜன் என்பவர் தொடர்ந்த பொது நலன் வழக்கு விசாரணை உயர் நீதிமன்றத்தில் நடந்தது.

இதையடுத்து ஒரு மாதத்தில் ஆய்வு செய்து அறிக்கை சமர்பிக்க உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.

-http://www.dinamani.com

TAGS: