பேரறிவாளன், சாந்தன், முருகன் மரண தண்டனையை ரத்து செய்தது சரியே: உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

perarivaalan_001பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ரத்து செய்தது சரிதான் என்று உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவம் தலைமையிலான அமர்வு கடந்த ஆண்டு பெப்ரவரி 18ம் திகதி ரத்து செய்து ஆயுள் தண்டனையாக குறைத்து உத்தரவிட்டது.

இதையடுத்து மத்திய அரசு, இந்த தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தது.

இந்த மனுவை கடந்த 2014ம் ஆண்டு ஏப்ரல் 1ம் திகதி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவம் தலைமையிலான அமர்வு தள்ளுபடி செய்தது.

அதை தொடர்ந்து, மத்திய அரசு மீண்டும் நீதிபதி சதாசிவம் தலைமையிலான அமர்வு அளித்த தீர்ப்பை திருத்தக் கோரி உச்ச நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு மே மாதம் மனு தாக்கல் செய்தது.

இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிகள், தீர்ப்பில் திருத்தம் கோரும் மத்திய அரசின் மனு விசாரணைக்கு உகந்தது அல்ல என்று கூறியுள்ளனர்.

மேலும், பேரறிவாளன் உள்பட 3 பேரின் மரண தண்டனையை ரத்து செய்தது சரியே என்று கூறி, மத்திய அரசின் மனுவை தள்ளுபடி செய்துள்ளனர்.

-http://www.newindianews.com

TAGS: