3 ஆயிரம் பிச்சைக்காரர்கள் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்த பயிற்சி: மத்திய அரசு

beggarபிச்சைக்காரர்களை பயன்படுத்தி மக்கள் நலத் திட்டங்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது

தூய்மை இந்தியா, பெண் குழந்தை பாதுகாப்பு போன்ற மக்கள் நலத் திட்டங்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, சமூகத்தின் விளிம்பு நிலையில் உள்ள பிச்சைக்காரர்களையே பயன்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இதற்காக முதற்கட்டமாக 3 ஆயிரம் பிச்சைக்காரர்களுக்கு அரசின் திட்டங்களை பாடல்களாக இசைத்து அதை ராகமாகப் பாடுவதற்கு பயிற்சி அளிக்கப்படவுள்ளது.

இந்தியாவை தூய்மைப்படுத்துவோம், பெண் குழந்தைகளைப் பாதுகாப்போம் என்பது போன்ற பிரச்சாரப் பாடல்களை பயிற்சி அளிக்க உள்ளனர்.

நாடக மற்றும் கலைத்துறை அமைச்சகமும், ஆல் இந்தியா ரேடியோவும் இணைந்து இந்த பயிற்சியை மேற்கொள்கிறது.

முதற்கட்டமாக அடுத்த மாதம் மும்பை மின்சார ரயில்களில் தொடங்கப்படவுள்ள இந்த திட்டம் பல மாநிலங்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

-http://www.newindianews.com

TAGS: