அரசு வருமானத்துக்காகத்தான் டாஸ்மாக் கடை: நத்தம் விஸ்வநாதன் பேச்சு

na-8765அரசு வருமானத்துக்காகத்தான் டாஸ்டாக் கடைகள் நடத்தப்படுவதாக அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் பேசினார்.

கடலூரில் அதிமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட நத்தம் விஸ்வநாதன் பேசுகையில்,

மது விற்பனையை வேண்டா விருப்பா நடத்துகிறோம். டாஸ்மாக் கடைகளை மூடுவதை விட குடிப்பவர்களுக்கு கவுன்சிலிங் கொடுத்து மன மாற்றத்தை உருவாக்க அம்மா நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். மதுவை ஒழிக்க வேண்டும் என்று கூறும் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்ற மாநிலங்களில் மதுக்கடைகளை முட சொல்லட்டும். அருகில் உள்ள புதுச்சேரி மாநிலத்தில் மதுக்கடைகளை முடச்சொல்லட்டும்.

கலிங்கப்பட்டியில் டாஸ்மடாக் கடை இருந்தது வைகோவுக்கு இதுவரை தெரியாதா. வாரா வாராம் கலிங்கப்பட்டி சென்று வரும் வைகோவுக்கு புதிய ஞானம் எங்கிருந்து தோன்றியது. இவர்களுக்கு அம்மா ஆட்சி மீது குறை சொல்லி பிரச்சாரம் செய்ய காரணம் கிடைக்கவில்லை. அதனால்தான் டாஸ்மாக் கடையை முடச்சொல்லி போராட்டம் செய்து வருகின்றனர். இதற்கு முன்பு ஆண்ட கட்சிகள் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பூரண மதுவிலக்கு கொண்டுவருவோம் என்று சொன்னார்கள். ஆனால் அதனை செய்யவில்லை.

இதற்கு முன்பு தனியார் நபர்கள் கொள்ளையடித்து வந்தார்கள். அந்த தனியார் நபர்கள் கொள்ளையடிப்பதை தடுத்து அந்த வருமானத்தை அரசுக்கு கொண்டுவர ஏற்பாடு செய்தோம். இன்றைக்கு டாஸ்மாக் முலம் அரசுக்கு வருமானம் வந்து கொண்டிருக்கிறது. அரசு இந்த கடையை திறக்கவில்லை என்றால் அந்த வருமானம் தனி நபர்களுக்கு போயிருக்கும்.

-http://www.nakkheeran.in

TAGS: