சேலம் மாவட்டம், இளம்பிள்ளை அருகிலுள்ள இடங்கனசாலை பேரூராட்சி, மேட்டுக்காடு என்ற ஊரை சேர்ந்த கந்தசாமி, பழனியம்மாள் தம்பதியினருக்கு வெங்கடாசலம், பெருமாள், செல்வம் என மூன்று மகன்கள். இதில், வெங்கடாசலம், செல்வம் இருவரும் வியாசாயத்துடன் நெசவு தொழிலையும் செய்து வருகிறார்கள். ஆறாம் வகுப்பு வரை மட்டுமே படித்த பெருமாள் முதலில் விசாயம் செய்து வந்துள்ளார்.
சேலம் கிச்சிப்பாளையத்தில் மருத்துவமனை நடத்தி வந்த மருத்துவர் பாலகிருஷ்ணனுடன் ஏற்பட்ட நட்பு இவரையும் மதுவுக்கு எதிரான பாதைக்கு கொண்டுவந்துள்ளது. பாலகிருஷ்ணன் கடந்த 28 ஆண்டுகளாக மதுவுக்கு எதிரான பரப்புரை செய்து வருகிறார்.
பெருமாள் தனது 16-வது வயதில், கள்ளுக்கடை ஒழிப்பு போராட்டத்தில் கலந்து கொண்டு ஐந்து நாள் சிறை சென்றாராம்.
காங்கிரஸ் கட்சியில் தீவிரமாக ஈடுபட்டிருந்த நடிகர் சசிகுமார் தனது மனைவி சசிகலாவுடன் தீவிபத்தில் பலியானதை தொடர்ந்து அவருடைய பெயரின் முதல் பாதியை தன்னுடைய பெயருடன் சேர்த்து பெருமாள் என்ற தன் பெயரை சசிபெருமாள் என்று வைத்துக்கொண்டார்.
இவரது தாத்தா அய்யாச்சாமி கவுண்டர் தங்கள் ஊருக்கு பள்ளிக்கூடம் வேண்டும் என்பதற்காக தன்னுடைய நிலத்தில் இருபது சென்ட் இடத்தை அரசுக்கு எழுதிக்கொடுத்து இவர்கள் வீட்டு முன்பாகவே ஒரு ஆரம்பப் பள்ளி அமைய காரணமாக இருந்துள்ளார்.
இப்போது, நடுநிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டபோது, இவர்களின் வீட்டுக்கு போக வழியில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. பிறகு, அதிகாரிகளிடம் முறையிட்டு நான்கு அடி அகலத்தில் வழி மட்டும் வாங்கியுள்ளனர்.
ஆரம்பம் முதலே குடும்ப வாழ்வில் பெரிய அளவில் ஈடுபாடு இல்லாமல் இருந்துள்ளார் சசிபெருமாள். முதல் மனைவி கோவிந்தம்மாள் இரண்டு ஆண் குழந்தைகளை விட்டுவிட்டு சென்றுவிட, அதற்கு பிறகு ஜலகண்டாபுரத்தை சேர்ந்த மகிழம் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு கவிதேவி என்கிற சுதந்திரதேவி (வயது-14) என்ற ஒரு மகள் உள்ளார்.
சசி பெருமாளுக்கு சொந்தமாக இரண்டு ஏக்கர் நிலம் உள்ளது. மழையை மட்டும் நம்பியுள்ள இந்த மானாவாரி நிலத்தில் உருப்படியாக எந்த வருமானமும் இல்லை. நாட்டு வைத்தியம், அக்குபஞ்சர் வைத்தியம், ஜோதிடம் என பல தொழிலகள் தெரிந்திருந்தாலும் அதில் முழு ஈடுபாடு காட்டவில்லை. 1996ல், வெள்ளைபிள்ளையார் கோவில் என்ற இடத்தில் சுந்தந்திரதேசம் என்று ஒரு நர்சரி பள்ளியை துவங்கினார். அதையும் முறையாக நடத்தாமல் விட்டுவிட்டார்.
ஆறு ஆண்டுகளுக்கு முன்பு சித்தர் கோவிலில் இருந்து கே.ஆர். தோப்பூர் வரையிலும் உள்ள சாலையை தார் ரோடாக போடவேண்டும் என்று அதிகாரிகளிடம் கேட்டுள்ளார். அந்த சாலையின் ஒரு பகுதி மகுடஞ்சாவடி ஒன்றியத்திலும், மற்றொரு பகுதி தாரமங்கலம் ஒன்றியத்திலும் உள்ளது. இதனால், யாருமே கவனிக்காமல் மோசமான நிலையிலிருந்த அந்த சாலையை சரி செய்யவேண்டும் என்று கூறி, சித்தனூர் என்ற இடத்திலிருந்த தண்ணீர் தொட்டி மீது ஏறி நின்று தீக்குளிக்க முயற்சி செய்துள்ளார். அதன் பிறகு, அதிகாரிகள் மேற்கொண்ட முயற்சியில் அந்த சாலை தார் ரோடாக போடப்பட்டுள்ளது. அதன் பிறகு, தன்னுடைய வீட்டுக்கு முன்பாக உள்ள ஆரம்பப்பள்ளியை நடுநிலை பள்ளியாக்க பல போராட்டங்களை நடத்தி அதையும் சாதித்துள்ளார்.
சசி பெருமாள் செல்போன் டவரின் மீது அமர்ந்து போராடியதில் உயிரிழந்துவிட்ட நிலையில் அவருடைய மனைவியை சந்தித்தோம். “வீட்டைப்பத்தியே கவலைப்பட மாட்டார். ஊர் ஊரா சுத்திக்கிட்டே இருப்பார். பிராந்தி கடையை மூடனும் என்று மட்டும் சொல்லிக்கொண்டே இருப்பார். அதற்காவே அவர் உயிரையும் விட்டுள்ளார்” என்றார்.
இரண்டாவது மகன் விவேக் பக்கத்திலுள்ள இளம்பிள்ளைக்கு நெசவுக்கு சென்று வருகிறார். முதல் மகன் பக்கத்திலுள்ள மாமனார் வீட்டில் தங்கி அங்குள்ள தோட்டத்தை கவனித்து வருகிறார்.
“எங்க குடும்பமே காங்கிரஸ் குடும்பம். பெருமாள் ஆறாம் வகுப்பு மட்டுமே படித்தான். சேலத்தை சேர்ந்த பாலகிருஷ்ணன் டாக்டர் தான் அவனுக்கு வழிகாட்டி. மதுவுக்கு எதிரான போராட்டத்துக்கு அவனை கூட்டிக்கொண்டு போனது அவர்தான். மற்றபடி தன்னுடைய வீட்டை பத்தியெல்லாம் பெருமாள் கண்டுக்கமாட்டான். ஊர் ஊரா சுத்திக்கிட்டுத்தான் இருப்பான்” என்றார் பெருமாளின் அண்ணன் வெங்கடாசலம். “இந்த பிராந்தியாலே பல வூடு கெட்டுப்போச்சு.., அதுக்கு எதிரா பிரச்சாரம் பண்ணின என் தம்பி ஊடும் இப்படியாகிடுச்சு” என்றார் தம்பி செல்வம்.
சேலத்தை சேர்ந்த மருத்துவர் பாலகிருஷ்ணனை சந்திக்க சென்றோம். மூன்று மதத்தையும் குறிக்கும் வகையில், தனது பெயரை பிராங்லின் ஆஸாத் காந்தி என பெயர் மாற்றம் செய்துகொண்டு காந்தி குடில் என்ற வீட்டில் வசித்து வருகிறார். “28-ஆண்டுகளாக மதுவுக்கு எதிராக பிரச்சாரம் செய்துகொண்டு, போராடிவருகிறேன். சசி பெருமாள் என்னோடு பல போராட்டங்களில் கலந்து கொண்டுள்ளார். 2008-சென்னை காந்தி சிலைக்கு முன்பாக நடந்த உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்டு நான்காம் நாள் மயக்கமடைந்தார். இப்போது, தன்னுடைய உயிரை கொடுத்து மதுவை தடுக்கவேண்டும் என கூறியுள்ளார். என்னுடைய நண்பர்கள், சிகிச்சைக்கு வருபவர்கள், என்னுடைய பள்ளியில் படிக்கும் மாணவர்கள் எல்லோருமே மதுவுக்கு எதிராக போராடுபவர்களே… ஆறு, எழு, எட்டாம் வகுப்பு மாணவர்களின் பாட புத்தகத்தில் மதுவின் தீமைகளை விளக்கும் பாடத்தை சேர்க்கவேண்டும் என கடந்த நான்கு ஆண்டுகாளாக தமிழக அரசு, தலைமை செயலர், கல்வி அமைச்சர், கல்வித்துறை செயலர் என நால்வருக்கும் தொடர்ந்து மனு அனுப்பி வருகிறேன். இது குறித்து பல அதிகாரிகள் வந்து விசாரித்துவிட்டும் சென்றுள்ளனர். ஆனால், அதை இன்னும் செய்யவில்லை. மது ஒழிந்தால் மட்டுமே நம் நாட்டில் ஒரு நல்ல இளைஞர் சமுதாயத்தை உருவாக்க முடியும் என்றார்.
-பெ.சிவசுப்ரமணியம்
-http://www.nakkheeran.in
ஐயா சசிபெருமாள் இறுதிச்சடங்கில் கலந்துக்கொண்ட அண்ணன் சீமானுக்கு இடம் தரவில்லையாம் கோவாலு,
எப்படி தருவார்??? இது டி.எம்.நாயர்,தியாகராய ரெட்டியார் கட்டிக்காத்த மண்,
கவெரா பூமியாக இருக்கும்போது எப்படி இடம் தருவார்??? அங்குட்டு ஓரமா நின்னுட்டு வந்துடனும்!!.வையாபுரி கொபாலுசாமி நாய்டுடா திருமலை நாயகரும் /கெட்டிபொம்மலுவும் ஆண்டமண்ணடா அடிமை சாதி ஓரமா நிக்கணும் ஒண்ணா ஒக்காரபுடாது என்று சொல்லாமல் சொல்லியுல்லாபிள!!
அரசியல் பிணந்திண்ணி அய்யா வைக்கோ ! (அவசியம் படியுங்கள் )
சசிபெருமாலின் இறந்துபோன உடலைவாங்க அய்யா வைக்கோ நேற்றுமுதல் தன்னை மறந்த நிலையில் தவம் இருந்துகொண்டு இருக்கிறார். அவர் இந்த இனத்திற்காக இரவும் பகலும் உழைப்பதை பார்க்கும் போதும், அதற்காக இன்றுவரை இந்த இனம் அவருக்கு எதுவுமே செய்யவில்லை என்று நினைக்கும் “கில்ட்டியாக” பீல் பன்னல.
சரி நாம விடயத்திற்கு வருவோம்.
2009 இல் முத்துக்குமார் இறந்துபோகிறார். முத்துக்குமார் சாம்பலை தமிழகம் முழுவதும் எடுத்துசென்று ஒரு உணர்வலையினை உருவாக்க திட்டமிட்ட போது, “தலைவர் வீட்டு வழியாக இதை கொண்டுசெல்லவெண்டாம், தலைவர் வருத்தபடுவார்” என்று சொன்ன சுபவீயை பார்த்து வைக்கோ எதுவும் சொன்னாரா ?. அங்கு எழுந்த உணர்வலைகளை அப்படியே தனதாக்கி கொள்ள நினைத்து “விதியே விதியே என் செய்ய நினைத்தாய் என் தமிழ் சாதியை” என்று முத்துக்குமார் எழுதிய தமிழ்தேசிய வரிகளில் தோற்று நின்றார். முத்துகுமாரின் பிணத்தில் அரசியல் செய்ய நினைத்து தோற்றுப்போனார்.
முள்ளிவாய்க்கால் முற்றம் வைக்கோ-நடராஜன் மற்றும் நெடுமாறன் இவர்களை கொண்டே அடிக்கல் நாட்டப்பட்டது. முள்ளிவாய்க்கால் முற்றத்தை வேலைநடக்கும் போது மாதம் ஒருமுறை சென்று பார்ப்பவர் வைக்கோ. நெடுமாறன் மற்றும் உலகதமிழர்களின் வேண்டுகோளிற்கு இணங்கவும் ஈழம் என்ற உன்னதத்திர்ககாகவும் அண்ணன் சீமான் அங்கு சென்று பார்த்தபிறகு, வைக்கோ அங்கு செல்வதை நிறுத்திக்கொண்டார். திறப்புவிழாவின் மூன்றுநாள் நிகழ்வில் முதல்நாளிலேயே அண்ணன் சீமானும், அய்யா வைக்கோவையும் பேசவைத்துவிட வேண்டும் என்று விரும்பினார் அய்யா நெடுமாறன். அண்ணன் சீமான் சம்மதித்ததும் அய்யா வைக்கோ சம்மதிக்கவில்லை. “சீமான் முதல்நாள் பேசினால், நிகழ்விற்கு வரமாட்டேன்” என்று சொல்ல அண்ணன் அடுத்த நாள் பேசினார்.
அந்த நிகழ்வின் முதல்நாள் மாலைநேரே அரங்கு துவங்குவதற்கு முன்னமே வந்த அண்ணன் பார்வையாளர்களில் ஒருவராக கடைசியில் அமர்ந்து இருந்தார். இதை அறிந்துகொண்ட அய்யா நெடுமாறன், நடராஜன் எல்லாம் எவளவோ வற்ப்புறுத்தி அழைத்தும் அண்ணன் சீமான் மேடையேறவில்லை. அன்று வைக்கோ மேடையில் பேசியதை கேட்டால் தற்பெருமையின் உச்சம். உங்களில் யாருக்கேனும் அய்யா வைக்கோ அங்கு பேசியதையும் அண்ணன் சீமான் பேசியதையும் ஒப்பிட்டு பாருங்கள். பேச்சும் ஒருவகை ராணுவம் என்பதை அன்றுதான் உணர்ந்தேன். இதை உணர்ந்த தமிழக உளவுபிரிவு சீமான் பேசிய அன்று இரவே எல்லா ஒலிவாங்கிகளையும் உடைத்துவிட்டு சென்றது போலீஸ். முள்ளிவாய்க்கால் முற்றம் விழாவிற்கு வரும் வைக்கோ மதிமுக சார்பில் எந்த இடத்திலும் விளம்பர பதகையோ சுவரெழுத்தொ இல்லை. ஏனனில் ஜெயாவுடன் கூட்டணி பேச்சு இறுதி செய்யப்படாத நிலையில் அவர் எந்த முடிவையும் தஞ்சை மாவட்ட மதிமுக சார்பில் செய்ய அனுமதிக்கவில்லை என்ற உண்மையை அறிவோம். ஈழம் உயிரின் உணர்வை அரசியலாய் பார்க்கும் பிணந்திண்ணி அய்யா வைக்கோ அவர்கள்.
அடத்ததாக அய்யா நம்மாழ்வார் அவர்கள்… மீத்தேன் பிரச்சனையில் தஞ்சையில் எல்லோரையும் அரவணைத்தே சென்றவர் அய்யா நம்மாழ்வார். அய்யா வைக்கோ அவர்களுக்கும் நம்மாழ்வார் அய்யாவிற்கும் எந்த ஒரு தனிப்பட்ட பகையும் கிடையாது. அய்யா நம்மாழ்வார் இறந்து போன இறுதி சடங்கில் ஏன் வைக்கோ கலந்துகொள்ளவில்லை ? திருச்சி இளைஞர் பாசறை பேரணியை துவங்கி வைத்தவர், நாம்தமிழர் கட்சி நடத்திய குடவாசல் மீத்தேன் திட்ட எதிர்ப்பு உண்ணாவிருதத்தில் கலந்துகொண்டவர், பழனியில் நாம்தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை நடத்திய பயிற்சி பாசறை நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றினார். நாம்தமிழர் நிகழ்வுகளில் அய்யா நம்மாழ்வார் கலந்துகொண்டார் என்ற ஒரே காரணத்திற்க்காக வைக்கோ நம்மாழ்வாரின் இறுதி சடங்கில் கலந்துகொள்ளவில்லை. ஆனால் அவர் இறந்து போனபிறகு காவிரி டெல்ட்டா சுற்றுபயணம் என்ற பெயரில் “வாழும் நம்மாழ்வாரே” என்று தஞ்சை நகரம் முழுமைக்கும் பதாகைகளை வைத்து நம்மாழ்வாரின் தியாகத்தை அரசியல் அறுவடை செய்ய பார்த்தவர் அய்யா வைக்கோ. அதிலும் தோற்றுபோய் அவமானப்பட்டு நின்றவர் வைக்கோ.
அய்யா அப்துல்கலாம் இறப்பதற்கு சிலநாட்கள் முன்னதாக நரேந்திர மோடியை சந்தித்த வைக்கோ, ஆந்திராவில் இருபது பேர் படுகொலைக்கு நீதிகேட்டு போனேன். மக்களெல்லாம் உங்களை திட்டுகிறார்கள் என்று சொன்னேன் என்று வந்து புலுகினார். சரி சந்திரபாபு நாயிடு உங்களின் நெருங்கிய நண்பர், பரஸ்ப்பர குடும்ப விழாக்களில் கலந்துகொள்பவர்கள் என்ற உரிமையில் அய்யா வைக்கோ அவர்கள் நேரடியாக சந்திரபாபு நாயிடுவை சந்தித்து 20 தமிழர்கள் இறப்பிற்கு நீதிகேட்டு இருக்கலாமே ?. இறந்த 20 தமிழர்கள் பிணத்திலும் அரசியல் செய்ய நினைத்தவர் அய்யா வைக்கோ தோற்றுபோனார்.
இரண்டு நாள் முன்னதாக திட்டிய இன எதிரி மோடியை அப்துல்கலாம் அண்ணனிடம் எப்படி சிரித்துக்கொண்டே அறிமுகப்படுத்த முடிகிறது ? பாரத பிரதமர் நரந்திர மோடிக்கோ, அல்லது காங்கிரஸ் ராகுல் காந்திக்கோ கட்டாயம் மொழிபெயர்ப்பு செய்து விடயங்களை விளக்க ஆள்கள் உடன் வந்து இருப்பார்கள். அந்தவேலையை அய்யா மொடி ஏன் செய்தார் ? வழக்கம் போலவே தனது பிணம்திண்ணி அரசியலில் ஆதாயம் தேட நினைத்து அங்கேயும் தோற்றுபோனார்.
தனது மகன் ITC (Imperial Tobacco Company) ஏஜென்ட். தனது பெயரிலேயே டொபாக்கோ என்று உள்ள நிறுவனம், வைக்கோவே ஒத்துக்கொண்ட பிறகும், புகையிலை பொருள்கள் விற்பதில்லை என்று சப்பைக்கட்டு வேறு மதிமுக மக்கள். தனது மகன் போதைப்பொருள் வியாபர ஏஜென்ட், தமிழகத்தில் உள்ள 11 சாராய தொழிற்ச்சாலைகளில் 11 திமுகவினருடையது. தனது அரசியல் சுயலாபத்திற்க்காக இவர்களை பற்றி எதுவுமே பேசாத வைக்கோ சசிபெருமாலின் பெயரை சொல்வதற்கோ, அந்த நிகழ்வில் கலந்துகொள்ளவோ என்ன தகுதி இருக்கு ? முகத்திற்கு நேராக திட்டிய மோடியிடமே இரண்டுநாட்களில் சிரித்து சிரித்து பேசிய வைக்கோ எதுவுமே பேசாத என் அண்ணன் சீமானை கண்டவுடன் ஏன் எரிச்சல் அடையவேண்டும் ? இன்னொருவர் இடம்கொடுக்க எழுந்தபோது வம்படியாக அவரின் கையைப்பிடித்து அமரவைக்கவேண்டும் ? இதுவும் பிணந்தின்னி அரசியலின் நீட்சி.
நெடுங்காலமாக மது ஒழிப்பிற்காக போராடி காலத்திலேயே உயிர்விட்ட அய்யா சசிபெருமாளின் இறப்பின் தியாகத்தை ஆவமதிக்க போதைப்பொருள் விற்பனை பிரதிநிதியின் தகப்பனாரான அய்யா வைக்கோ அவர்களும், தமிழ்நாட்டில் 11 சாராய தொழிற்ச்சாலைகளை வைத்துள்ள திமுகவின் தலைமை ஸ்டாலினும் அவரின் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொள்கிறார்கள். வழக்கம்போலவே ஒரு தமிழனின் தியாக பிணத்தின் மீது திராவிட அரசியல் கழுகுகள் கொத்தி தின்றுகொண்டு இருக்கிறது. இதற்க்கு முதன்மையானவர் வைக்கோ.என்கிற வையாபுரி கோபாலசாமி நாய்டு