தேசிய பாதுகாப்பு ஆலோசகரை சந்திக்க வரும்படி காஷ்மீர் பிரிவினைவாதிகளுக்கு பாகிஸ்தான் தூதர் அழைப்பு

ipபுது டெல்லி, ஆக. 19- நெடுநாளாகத் தடைபட்டிருந்த இந்தியா-பாகிஸ்தான் இடையேயான வெளியுறவுத்துறை செயலர்கள் அளவிலான பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்குவதற்கு முயற்சி மேற்கொண்டுள்ள நிலையில் பிரிவினைவாதிகளுக்கு பாகிஸ்தான் தூதர் அழைப்பு விடுத்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

முன்பு ஜம்மு காஷ்மீரில் பகுதியில் மட்டும் ஊடுருவி தாக்குதல் நடத்தி வந்த பாகிஸ்தான் தீவிரவாதிகள், சமீபத்தில் பஞ்சாபிலும் தாக்குதல் நடத்தினர். தவிர காஷ்மீரில் சமீபத்தில் பாகிஸ்தான் தீவிரவாதி ஒருவரும் உயிருடன் பிடிபட்டுள்ளார். இது தவிர இந்திய சுதந்திர தினம் மற்றும் அதற்கு அடுத்த நாளில் பாகிஸ்தான் ராணுவத்தினர் ஜம்மு – காஷ்மீர் எல்லைப் பகுதியில் அத்துமீறி நடத்திய தாக்குதலில் 6 பேர் உயிரிழந்தனர். இந்த சூழ்நிலையில் இருநாட்டு தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் அடுத்த வாரம் டெல்லியில் சந்தித்து பேச இருப்பது கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது.

இந்தியா-பாகிஸ்தான் வரலாற்றில் முதல்முறையாக இரு நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் இப்போதுதான் சந்தித்து பேச்சு நடத்த இருக்கின்றனர்.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில், காஷ்மீர் பிரிவினைவாதிகளுடன், பாகிஸ்தான் தூதர் பேச்சுவார்த்தை நடத்தியதன் காரணமாக, இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளின் வெளியுறவுத்துறை செயலர்கள் பேச்சுவார்த்தையை இந்தியா ரத்து செய்தது.

டெல்லியில் நடைபெறவுள்ள ஆலோசனைக்கூட்டத்தில் கலந்து கொல்வதற்காக பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சர்தாஜ் அஜீஸ் வரும் 23ம் தேதி டெல்லி வரவுள்ள நிலையில், அவரை சந்திப்பதற்கு இந்தியாவில் உள்ள பாகிஸ்தான் தூதர், பிரிவினைவாத தலைவர் சையத் அலி ஷா கிலானி, மற்றும் மிர்வாஸ் உமர் பரூக் போன்ற காஷ்மீர் பிரிவினைவாதிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

-http://www.maalaimalar.com

TAGS: