குஜராத்தில் படேல் சமூகத்தின் தலைவர் ஹர்தீக் படேல் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அங்கு வன்முறை சம்பங்கள் நடந்துவருகின்றன.
குஜராத்தில் படேல் சமூகத்தினர் அம்மாநில மக்கள் தொகையில் சுமார் 12 சதவீதம் உள்ளனர். படேல் சமூகத்தினர், தங்களை ஓபிசி (இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பு) பிரிவில் சேர்த்து அதிக இட ஒதுக்கீடு தரவேண்டும் என்று போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்தப் போராட்டத்தின் ஒரு பகுதியாக, அகமதாபாத்தில் லட்சக்கணக்கான மக்கள் கலந்துக்கொண்ட மாபெரும் மாநாடு மற்றும் பேரணி நடத்தப்பட்டது. 48 மணிநேர உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என்று ஹர்தீக் படேல் அறிவித்தார். இதற்கு காவல்துறை அனுமதி வழங்க மறுத்து அவரை கைதுசெய்தது.
இந்நிலையில், ஹர்தீக் படேல் கைதுசெய்யப்பட்ட சம்பவம் மாநிலம் முழுவதும் பரவியதால். சூரத், ராஜ்காட் உள்பட பிறபகுதிகளிலும் வன்முறை பரவியது. பின்னர் ஹர்தீக் படேல் விடுதலை செய்யப்பட்டார்.
இதைத் தொடர்ந்து, அகமதாபாத்தில் சில வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. குஜராத்தில் பல்வேறு பகுதிகளில் கல் வீச்சு சம்பவம் நடைபெற்றது என்று மாநில காவல்துறை கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், வடக்கு குஜராத்தில் நேற்று இரவு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதே போல், சூரத்தில் உள்ள சில பகுதிகளிலும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது.
மேலும், நிலையை கட்டுக்குள் கொண்டுவர துணை ராணுவப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்கு பதற்றம் நிரவுகிறது. இதனால் ஆமதாபாத் மற்றும் சூரத் உள்ளிட்ட பகுதிகளில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்ட்டுள்ளது. இந்நிலையில், குஜராத் மாநில உள்துறை அமைச்சர் ரஜினி படேலின் வீட்டை போராட்டக்காரர்கள் தாக்கியதுடன், தீ வைத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் இங்கு தொடர்ந்த பதற்றம் நீடித்து வருகின்றது.
-http://www.athirvu.com