பெங்களூரு:“இந்தாண்டு, காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில், குறைந்தளவு மழை பெய்துள்ளதால், பங்கீட்டின்படி, தமிழகத்துக்கு தண்ணீர் வழங்குவதில் பிரச்னை ஏற்பட்டுள்ளது,” என, கர்நாடக நீர்வள அமைச்சர் அமைச்சர் எம்.பி.பாட்டீல் கூறினார்.
பெங்களூரில், அவர், நிருபர்களிடம் கூறியதாவது:மழை பற்றாக்குறை காரணமாக, கிருஷ்ணராஜசாகர் அணையில் நீர் இருப்பு குறைந்துள்ள நிலையிலும், எப்படியாவது, தமிழகத்துக்கு நீரைவிடுவிக்க வேண்டும் என, கருதினோம்.ஆனால், நதிநீர் பங்கீட்டின்படி, பருவமழை குறைவான காலங்களில், எவ்வளவு நீர் விடுவிக்க வேண்டும் என, நடுவர் மன்றம் குறிப்பிட்டுள்ளதோ, அந்த அளவு நீரை விடுவிப்பதற்கு கூட சாத்தியமில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. எப்போதும் இல்லாத அளவில், இந்தாண்டு கர்நாடகாவில் உள்ள அணைகளில் நீர் இருப்பு குறைந்து உள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.
-http://www.dinamalar.com
அட இண்டியன்கள் என்ன ஒரு இனமா தண்ணீர் விட. தமிழரைப் பற்றி சிந்திக்காத தமிழ் நாட்டிற்கு எதற்குத் தண்ணீர்? அவர்களுக்கு டாஸ்மாக் கடையில் கிடைக்கும் தண்ணீரே போதுமானது.