வரப்போகிற ஐநா மனித உரிமைகள் ஆணையக்கூட்டத்தில் ஐநா விசாரணைக்குழு வெளியிடவுள்ள அறிக்கை மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழக சட்டமன்றத்தில் அனைத்துக்கட்சியினரின் ஆதரவுடன் தீர்மானத்தை நிறைவேற்ற முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் தமிழர் தேசிய முன்னணியின் தலைவப் பழ. நெடுமாறன்.பதிவு இணையச் செய்தி
செய்தியாளர் சந்திப்பில் மேலும் கூறியது:
அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் நிஷாபிஸ்வா என்பவர் இலங்கையில் உள்ள இரு இனங்களுக்கு இடையே சமரசப் போக்கு நிலவி வருவதாகவும், தமிழர் பகுதிகளில் மாற்றம் கொண்டுவர இந்த அரசு பாடுபடுவதாகவும், இலங்கையில் போர்க்காலத்தில் நடைபெற்ற போர்க்குற்றங்கள், இனப்படுகொலை, மனித உரிமை மீறல் குறித்து உள்நாட்டு விசாரணையே போதும், பன்னாட்டு விசாரணை தேவையில்லை. இதற்காக ஐநா மன்றத்தில் அமெரிக்கா தீர்மானம் கொண்டுவரும் எனக்கூறியுள்ளார்.பதிவு இணையச் செய்தி
அமெரிக்காவின் இரட்டை வேடம் அம்பலம்:
இலங்கைப்பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேயும் இலங்கையில் சர்வதேச விசாரணையை ஒரு போதும் ஏற்க மாட்டோம் எனக்கூறிவிட்டார். கடந்த காலத்தில் ஐநா மன்றத்தில் ராஜபக்சே அரசுக்கு எதிராக அமெரிக்கா, மேற்கு நாடுகள் கொண்டு வந்த தீர்மானத்துக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவரவுள்ள தீர்மானம் அமெரிக்காவின் இரட்டை வேடத்தை அம்பலப்படுத்தியுள்ளது.பதிவு இணையச் செய்தி
இலங்கைத்தமிழர்களுக்கு எதிராக சிங்கள அரசின் ராணுவம் மேற்கொண்ட இனப்படுகொலை, போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் ஆகியவற்றை மூடி மறைப்பதற்கு இலங்கை அரசு செய்யும் முயற்சிகளுக்கு அமெரிக்கா துணை போகிறது என்பது இன்று தெளிவாகியுள்ளது.
ஈழத்தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை தடுக்க வேண்டும் என்ற நோக்கத்தை விட இந்துமாக்கடலில் சீனாவின் ஆதிக்கத்தை வேரூன்ற விடக்கூடாது என்பதே அமெரிக்காவின் கவலையாக உள்ளது. இதற்காகத்திட்டமிட்டு சிறீசேனாவையும், ராஜபக்சேவையும் பிரித்து, சந்திரிகா, ரணிலுடன் சேர்த்துவைத்து
பிரதமர் தேர்தலில் ராஜபக்சேவை தோற்கடித்ததில் அமெரிக்காவுக்கு பங்கு உண்டு என்ற ராஜபக்சேவின் குற்றச்சாட்டு நிரூபணமாகியுள்ளது.பதிவு இணையச் செய்தி
தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்:
விரைவில் கூடவுள்ள ஐநாமன்ற விசாரணை ஆணையக்கூட்டத்தில் ஐநா விசாரணைக்கு குழு வெளியிடவுள்ள அறிக்கை மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டி தமிழக மக்களும், உலகத்தமிழர்களும் ஒன்று பட்டு நின்று வலியுறுத்த வேண்டும். அதே போலே, தமிழக சட்டமன்றத்தில் இதற்கான தீர்மானத்தை கொண்டு வந்து அனைத்துக்கட்சி ஆதரவுடன் நிறைவேற்ற முதல்வர் ஜெயலலிதாவுக்கு வேண்டுகோள் வைக்கிறேன். மேலும், இதை வலியுறுத்தி ஐநா மனித உரிமைகள் ஆணையத்தில் ஆதரவான தீர்மானத்தை இந்தியா கொண்டு வர பிரதமர் மோடியையும் தமிழக முதல்வர் வலியுறுத்த வேண்டும்.
இலங்கைத்தீவு சர்வதேச வல்லரசுகளின் மோதல் களமாக மாறிவருவது இந்தியாவுக்கு பேராபத்தாகும் என்பதை பிரதமர் மோடி உணர வேண்டும்.பதிவு இணையச் செய்தி
சென்னைப் பல்கலைக்கழக பேராசிரியர் நீக்கம் முதல்வருக்கு தெரியாமல் நடந்திருப்பதாகவே கருதுகிறேன்:
சென்னை பல்கலைக்கழக அரசியல் விஞ்ஞானத்துறை பேராசிரியர் ராமு. மணிவண்ணன் பதவி நீக்கம் செய்தது கண்டனத்துக்குரியது. கடந்த காலங்களில் நடந்த மனித உரிமைகள் ஆணையக்கூட்டங்களில் பங்கேற்று பல்வேறு நாட்டுப்பிரதிநிதிகளைச் சந்தித்து ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேற்ற உதவியவர். தற்போது நடைபெறவுள்ள ஐநா மனித உரிமைகள் ஆணையக்கூட்டத்தில் பங்கேற்பதைத் தடுப்பதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் அமெரிக்கா,
இலங்கை ஆகிய நாடுகளின் அழுத்தம் காரணமாகவே சென்னை பல்கலைக்கழகம் நடவடிக்கை எடுத்துள்ளது. முதல்வர் கவனத்துக்கு வராமலேயே இப்பிரச்சினை கையாளப்பட்டிருப்பதாகக் கருதுகிறேன். எனவே, இதில், முதல்வர் தலையிட்டு பேராசிரியர் ராமு. மணிவண்ணனுக்கு நீதி கிடைக்க உதவி செய்ய வேண்டும்.பதிவு இணையச் செய்தி
இந்திராகாந்தி இருந்தவரை இந்திய அரசியலில் பிறநாடுகளின் தலையீடு இல்லை:
இந்திராகாந்தி காலத்தில் இந்திய அரசியலில் பிற நாடுகளின் தலையீட்டை அவர் ஒருபோதும் அனுமதிக்கவில்லை. ஆனால், அவருக்குப்பின் வல்லரசுகள் வேட்டையாடும் களமாக இந்தியா மாறிவிட்டது. இந்த நிலை தொடர்வது இந்திய அரசியலில் ஸ்திரமற்ற தன்மை உருவாகும் என்றார் பழ. நெடுமாறன்.
-http://www.pathivu.com
நாம் ஒன்றுபடாதவரை பொருளாதார பலம் பெறாத வரை அமேரிக்கா போன்ற நாடுகள் நம்மை மதிக்க போவதில்லை
அமெரிக்காவிடம் பல முகமூடிகள் உள்ளன தேவைக்கேற்ப மாற்றிக் கொள்வார்கள். அதுவே அவர்களின் பலம். நெறியற்ற நேர்மை என்று அரசியல் அறிவியலில் கற்ற பாடம்
இழந்த அனைத்து நிலங்களுடன் தனி தமிழர் நாடு ஒன்றே தீர்வு!!!
தனி தமிழ் நாடு அமைக்க விடுவோமா?அது எங்களுக்கு பெரும் ஆபத்தை கொடுக்கும் என்பதும் எங்களுக்கு தெரியும்.இலங்கையில் புலிகளை கொன்றதுபோல் உங்களுக்கும் அதே கதிதான் இந்தியாவில் ஏற்படும்.உங்களால் ஒன்னும் பு…………… முடியாது.
என்னது தனி தமிழ் நாடா ? தமிழனக்கு ஒரு மாநிலாமாவது இருக்கானு பாருங்க ..
புடுங்குவதில் வல்லமை பெற்ற உன் இனம் இருக்கும் பொது எங்களுக்கு ஏனடா அந்த தொழில்? உன் ஆதி மன்னன் பேடி விஜயன் ஆரம்பித்த தொழிலை இன்றுவரை திறன்பட செய்து வருகிறீர்….Samara asingam!!! தமிழனை வெல்ல உனக்கு 24 பெட்டையர்கள் கூட்டம் தேவை பட்டதை உலகமே அறியும்! தனி நாடு அமைவதை உன் அப்பன்,பட்டன்,
முப்பாட்டன் எவன் வந்தாலும் தடுக்க முடியாதடா பொறம்போக்கு!!!