தமிழர்கள் இந்தி படிக்கவேண்டும்.. சமஸ்கிருதம் தெரியாததால் வெட்கப்படுகிறேன்: பொன்.ராதாகிருஷ்ணன்

pon_radha_001தமிழர்கள் இந்தி, சமஸ்கிருதம் ஆகிய மொழிகளை படிக்க வேண்டும் என்று மத்திய துறைமுகம் மற்றும் கப்பல் போக்குவரத்து துறை இணையமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.

சென்னையில் கல்லூரி ஒன்றில் நடைபெற்ற சமஸ்கிருத மகாசம்மேளன விழாவில் சிறப்பு விருந்தினராக மத்திய துறைமுக மற்றும் கப்பல் போக்குவரத்து துறை இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டார்.

அப்போது அவர் கூறியதாவது, பல்வேறு காரணங்களால் சமஸ்கிருதம் கற்றுக் கொள்ள முடியாமல் போனது. அதற்காக நான் வெட்கப்படுகிறேன்.

சமஸ்கிருதம் படிக்காததால் அந்த மொழியை என்னால் பேச முடியவில்லை. ஆனால் அடுத்து வரும் தலைமுறை தங்களின் அறிவை வளர்த்துக் கொள்வதற்காக பல்வேறு மொழிகளை கற்க வேண்டும் என விரும்புகிறேன்.

கேரளா மற்றும் ஆந்திர மக்கள் இந்தி கற்றுக் கொள்கிறார்கள். ஆனால், தமிழர்கள் இந்தி படிப்பதை தவிர்ப்பது ஏன் என்று எனக்கு புரியவில்லை.

சமஸ்கிருதமும் தமிழும் இரு கண்கள் போன்றவை. இதில் எது உயர்ந்தது, தாழ்ந்தது என யாராலும் சொல்ல முடியாது.

அவைகள் ஒன்றுடன் ஒன்று தொடர்புடன் வளர்ச்சி அடைந்தவைகள்.

கம்பன் தமிழில் எழுதிய ராமாயணத்தை படித்து மகிழ்ந்துள்ளேன். அதே அளவு மரியாதையை சமஸ்கிருதத்தில் வால்மீகி எழுதிய ராமாயணத்திற்கும் கொடுக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

-http://www.newindianews.com

TAGS: