கேவையில் 7ம் வகுப்பு மாணவன் ஒருவர் கண்களை கட்டிக்கொண்டே தேர்வு எழுதி அசத்தியுள்ளார்.
கோவை பீளமேடுபுதூர் பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன், ராதிகாதேவி தம்பதியின் மகன் மாதேஷ் பரத்குமார்(12).
தனியார் மெட்ரிக்பள்ளி ஒன்றில் 7ம் வகுப்பு படித்து வருகிறார். கோவை தனியார் பயிற்சி நிறுவனத்தில் ‘பிரைன் ட்ரைன் புரோகிராம்’ என்ற பயிற்சியை பெற்று வருகிறார்.
இதன் மூலம், கண்களை மூடிக்கொண்டே நாளிதழ்களை வாசித்தல், எதிரேயுள்ள பொருள்களை அடையாளம் காணுதல், சாலையில் எந்த வாகனம் செல்கிறது என கண்டுபிடித்தல் உள்ளிட்ட பல்வேறு விசயங்களை செய்ய மாதேஷ் பரத்குமார் கற்றுகொண்டார்.
மேலும், கண்களை கட்டியவாறு தேர்வு எழுதுவதற்காக, சில பிரத்யேகமான பயிற்சிகளையும் பெற்றார்.
இந்நிலையில், காலாண்டுத்தேர்வில் ஒரு பாடத்தை மட்டும் கண்களை கட்டிக்கொண்டு எழுத அனுமதிக்க வேண்டும் என பள்ளி நிர்வாகத்திடம் மாதேஷ் கோரிக்கை வைத்தார்.
அதன்படி நேற்று நடந்த காலாண்டு இறுதி தேர்வின், ஆங்கிலப் பாடத்தேர்வினை கண்ணை கட்டியவாறு பிழையின்றி எழுதி அசத்தினார்.
இதுகுறித்து மாதேஷ் பரத்குமார் கூறுகையில், பயிற்சி மூலம் கண்ணை கட்டிக்கொண்டு டி.வியில் உள்ள நிகழ்ச்சிகளை யூகிக்கவும், எதிரில் உள்ளவர்கள் என்ன நிற உடை அணிந்திருக்கிறார்கள் உள்ளிட்டவைகளை அறிய முடியும்.
மேலும், இந்த பயிற்சியில் எழுத்துகளுக்கு வாசனை உண்டு என்பதை அறிந்தேன். அதை பயன்படுத்தியே, நான் கண்களை கட்டிக்கொண்டு தேர்வு எழுதினேன் என்று தெரிவித்துள்ளார்.
-http://www.newindianews.com