ஐடி பசங்க நிலைமை ரொம்பவே மாறிவிட்டது.. அப்படி என்ன ஆச்சு..?

indian-it-industryபெங்களூரு: இந்தியத் தொழில் துறைகளில், தகவல் தொழில்நுட்பத் துறைக்கு, அட அந்தாங்க சாப்ட்வேர் துறைக்கு மிகப் பெரிய வரலாறு உள்ளது. ஒரு காலத்தில் இதில் பணிபுரிவோறேல்லாம் கொடுத்து வெச்சவங்க அப்படின்னு பேசப்பட்டவர்கள். சம்பளங்களில் அவர்களுக்குக் குறைவின்றி இருந்ததுடன் செலவு செய்வதில் அவர்கள் சுதந்திரப் பறவைகளாக இருந்தார்கள்.

இந்தியாவில் இருந்த தொழில் வல்லுநர்களில் ஒரு பெரிய சதவிகிதம் இவர்கள் தான், அதிலும் அதிகம் செலவு செய்பவர்களாகவும் இவர்கள் இருந்தார்கள். இவர்களை நம்பிப் பல வர்த்தக நிறுவனங்கள் மற்றும் தொழிற்துறை செயல்பட்டு வந்தது என்றே கூறலாம்.

ஆனால் தற்போது இந்த ஐடி துறையில் நிலவி வரும் ஏற்ற இறக்கங்கள் இந்தச் சூழ்நிலையை இறங்குமுகமாக மாற்றிவிட்டது. இதனால் இத்துறை பணி வல்லுநர்கள் அவர்களுடைய செலவு செய்யும் போக்கில் நிறையச் சிக்கல்களைச் சந்தித்து வருகின்றனர்.

கடந்த சில மாதங்களாக ஐடி துறை வேலைவாய்ப்புக்களில் குறிப்பிடத்தக்க தட்டுப்பாட்டைக் கண்டுள்ளது. அப்படியே வேலைவாய்ப்புகள் இருந்தாலும் அவை குறைந்த வருடச் சம்பள அடிப்படையில் உள்ள வேலைவாய்ப்புகளாக மாற்றப்பட்டுள்ளன.

110 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புடைய இந்திய ஐடி தொழில் துறை திடீர் தொய்வைச் சந்தித்ததுடன் அதன் வளர்ச்சியும் கேள்விக்குறியாகியுள்ளது. இந்த மாற்றம் ஐடி பணியாளர்களைப் பாதித்துள்ளதுடன் இந்த மாற்றத்தை எதிர்கொள்ள அவர்கள் தங்கள் செலவினங்களைக் குறைத்துக்கொள்ளவும் செய்துள்ளது.

பொருட்களின் விலைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. வீட்டு உபயோகப் பொருட்கள் முதல் வீடுகள் வீட்டு மனைகள், துணிமணிகள், பெட்ரோல் டீசல் என ஒவ்வொரு துறையும் குறிப்பிடத்தக்க மாற்றத்தைச் சந்தித்து வருகின்றன. ஆனால் இந்தப் பணவீக்க அளவை ஒப்பிடும்போது அவர்களுக்குக் கிடைக்கும் சம்பள உயர்வு ஏணி வைத்தாலும் எட்டாது. இந்த ஒரு காரணம் ஐடி பணியாளர்கள் முன்போல் செலவு செய்வதை நிருத்திவிட்டதற்கு முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகிறது.

ஐடி துறை தொழிலில் ஏற்பட்டுள்ள மந்த நிலை பணியாளர்களுக்கு வேலைப் பறிபோகும் அபாயத்தையும் அதிகரித்து அவர்களுக்கு ஒரு பெரும் சவாலாக மாறியுள்ளது. இந்தத் துறை நிறுவனங்கள் ஒப்பந்தங்கள் இல்லாதபோது தங்கள் பணியாளர்களை “பெஞ்ச்” முறையில் வைத்திருக்கும். அதாவது இந்த முறையில் பணியின்றி அவர்களுக்குச் சம்பளம் வழங்கும். இந்தப் பெஞ்ச் முறை கால அளவு ஒவ்வொரு நிறுவனத்திற்கும் மாருமபடுவதுடன் அதிகப் பட்சம் ஆறு மாதம் வரை இருக்கும்.

ஐடி துறை தொழிலில் ஏற்பட்டுள்ள மந்த நிலை பணியாளர்களுக்கு வேலைப் பறிபோகும் அபாயத்தையும் அதிகரித்து அவர்களுக்கு ஒரு பெரும் சவாலாக மாறியுள்ளது. இந்தத் துறை நிறுவனங்கள் ஒப்பந்தங்கள் இல்லாதபோது தங்கள் பணியாளர்களை “பெஞ்ச்” முறையில் வைத்திருக்கும். அதாவது இந்த முறையில் பணியின்றி அவர்களுக்குச் சம்பளம் வழங்கும். இந்தப் பெஞ்ச் முறை கால அளவு ஒவ்வொரு நிறுவனத்திற்கும் மாருமபடுவதுடன் அதிகப் பட்சம் ஆறு மாதம் வரை இருக்கும்.

ஒருகாலக் கட்டத்தில் ஐடி பணியாளர்கள் தாங்கள் எதை வாங்கினாலும் இஎம்ஐ எனப்படும் மாதாந்திர தவணை முறையிலேயே வாங்க விரும்பினர். அவை அவர்களுக்குப் பாதுகாப்பாகவும் பொருத்தமானதாகவும் இருந்தது. காரோ அல்லது அபார்ட்மெண்ட் வாங்கவோ அவர்கள் இஎம்ஐ முறையையே நாடினர். ஆனால் தற்போது, சம்பளக்குறைவு வேலை ஸ்திரத் தன்மைக் குறைவு ஆகிய காரணங்களால் இஎம்ஐ மூலம் வாங்குவதில் ஆர்வம் குறைந்துள்ளது.. தங்கள் வேலைக் குறித்த அச்சத்தினால் தவணைகளைச் செலுத்த இயலாமல் போய்விடும் என அவர்கள் நினைக்கின்றனர்.

ஒரு காலத்தில் ஐடி துறை இந்தியாவில் வேகமான வளர்ச்சி கொண்ட ஒரு துறையாக இருந்தது. அது ஆறு பில்லியன் அமெரிக்க டாலர் என்ற அளவில் இருந்து 110 பில்லியன் டாலர் என்ற அளவிற்கு 2002-2012 ஆம் ஆண்டுக் காலகட்டத்தில் வளர்ந்தது. ஆனால் காலத்திற்கு ஏற்றாற்போல் இந்தத் துறையும் சில மாற்றங்களைக் கண்டது. சாப்ட்வேர் மட்டுமே பெரும்பாலும் முன்னிலை வகித்து வந்த ஐடி துறையில் தற்போது டேட்டா மற்றும் கிளவுட் கம்பியுடிங், மொபிலிட்டி மற்றும் கன்சல்டிங் ஆகியவை முக்கியத்துவம் பெறத் துவங்கியுள்ளன.

tamil.goodreturns.in

TAGS: