ராஜஸ்தான் மாநிலத்தில் உயர்ந்த சாதி வகுப்பினர் சாப்பிடும் “தட்டினை” தொட்ட தாழ்ந்த சாதி மாணவனை ஆசிரியர் கண்மூடித்தனமாக அடித்துள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளியில் 4 ஆம் வகுப்பு படித்து வரும் தினேஷ் மெக்வா(10) என்ற தாழ்ந்த சாதி சிறுவன், மதிய உணவின்போது, அங்கு வைக்கப்பட்டிருந்த தட்டுகளை எடுத்து மற்ற மாணவர்களுக்கு கொடுத்துள்ளான்.
இதனைப்பார்த்த ஆசிரியர், அவனை கூப்பிட்டு கண்டித்ததோடு மட்டுமல்லாமல் மாணவனை கண்மூடித்தனமாக அடித்ததில், உடலில் ரத்தகாயம் ஏற்பட்டுள்ளது.
இதனால் கோபம் கொண்ட மாணவனின் தந்தை, நேராக ஆசிரியர் சவுத்ரி வீட்டுக்கு சென்று எவ்வாறு என் மகனை அடிக்கலாம்? என்று வாக்குவாதம் செய்துள்ளார்.
இந்த வாக்குவாதம் முற்றவே, ஆசிரியர் சவுத்ரி, மாணவனின் தந்தையையும் தாக்குவதற்கு முயற்சிசெய்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து ஆசிரியர் மீது, மாணவனின் தந்தை பொலிசில் புகார் அளித்துள்ளார்.
-http://www.newindianews.com
வாழ்க பாரதம்……..
இந்த மாதிரி செய்தி theevaiyaa
இந்தியாவில் நடந்ததை, நடப்பதைத்தானே செய்தியாகப் போட்டார்கள். சில நேரத்தில் சில மனிதர்களுக்கு உண்மை கசக்கத்தான் செய்யும். சொல்லடி, கல்லடி வாங்கியவனுக்குத்தான் தெரியும் அதன் பெருவலி. வருணசிரமத்தைப் போற்றும் இந்து மதம் “தமிழரின் மதம்”! எவ்வளவு தமிழருக்கு “சாதி” என்ற “மதம்” தலைக்கு ஏறிப் போயிருக்கு என்று பாருங்கள். சாதியில்லை என்று தமிழர் கொண்ட சைவம் கூறுவதைக் கேள்மின்கள். . .
இந்த பிஞ்சு மனம் இப்படி வெம்பிப் பழுத்தால் ஏன் மதம் மாற மாட்டான்? ஏன் மதம் மாற்றப் படமாட்டான்?. இந்து என்போரில் பலர் சுலபமாக மதம் மாற்றப் படலாம் என்பதற்கு இச்செய்தி ஒரு நற்சான்று. தமிழர்களே விழித்துக் கொள்ளுங்கள். பிழைத்துக் கொள்வீர்கள்.
• தலித்துகளின் சேலை உரியும்போது கண்ணன் வரமாட்டானா?
துச்சாதனனால் பாஞ்சாலியின் சேலை உரியப்பட்டபோது கண்ணன் ஓடிவந்து அவள் மானம் காத்ததாக பாரத கதை கூறுகிறது.
இன்றைய நவ பாரத நாட்டில் தாழ்த்தப்பட்ட தலித் மக்களின் சேலை உரியப்படும்போது அந்த கண்ணன் ஏன் வரவில்லை?
பாஞ்சாலிக்கு ஆபத்து என்றவுடன் ஓடி வந்த கண்ணன் இன்று தலித் பெண்களுக்கு வராமல் இருப்பது ஏன்?
தலித் மக்கள் என்றால் கடவுள் கண்ணனுக்கும் பிடிக்காதா? அல்லது
தலித்துகள் காப்பாற்றப்பட வேண்டிய மனிதர்கள் இல்லை என்று கடவுள் நினைக்கிறாரா?
கண்ணன் வர மாட்டான்.
கண்ணன் தலித்துகளை காப்பாற்ற மாட்டான்.
தலித்துகள் அடிக்கு அடி கொடுக்க வேண்டும்.
அப்போது படிப்பினை வேறுவிதமாக அமையும்.
ஏய் இந்தியாவே!
நிர்வாணமாக்கப்பட்டிருப்பது யாரோ இரு தலித்துகள் அல்ல. மாறாக நிர்வாணமாக்கப்பட்டிருப்பது இந்தியதேசம் என்பதை புரிந்துகொள்.
கண்ணன் பணக்காரன் மற்றும் என்னமோ வானில் இருந்து குதித்தவன்களுக்கு மட்டும் தான் தோன்றி நியாயம் கேட்பான். இவ்வளவு அநியாயம் நடந்தும் இந்திய அரசு வெறும் பேச்சு பேசியே காலத்தை கடத்தும்.மேற்கு நாடுகள் இது போன்றவற்றை களைவதற்கு எவ்வளவோ செய்துள்ளன அத்துடன் சட்டம் செயல் படவும் உறுதியுடன் செயல் படுகின்றன. இந்து மதத்தில் உள்ள இந்த கீழ்தர எண்ணங்கள் என் இன்னும் ஊறிப்போய் இருக்கின்றன? அறிவுக்கும் இந்துக்களுக்கும் தொடர்பு இல்லையா? நந்தனாருக்காக நடராஜர் கோவில் பூசாரிகளுக்கு தோன்றி அவரை தன்னை தரிசிக்க கூறிய அந்த நடராஜர் இந்து தானே? கண்ணன் ஏன் கருப்பு? அதிலும் நம்மவர்களுக்கு கருப்பு என்னமோ விஷம் போல் தெரிகிறது– தமிழ் படத்தில் பாருங்கள் குழு நடனங்களில் யாராவது கருப்பு தோல் பெண் இருக்கிறாளா என்று? பெரும்பாலான வெள்ளையர்கள் கருப்பினத்தை ஏற்று கொள்கின்றனர் ஆனால் நம்மவர்கள் ? யார் உயர்ந்தவர்? யார் தாழ்ந்தவர்? இந்தியாவில் உள்ளவர்களுக்கு மரியாதை எங்கு இருக்கிறது என்று அங்கு போய் பார்த்தால் தான் புரியும்,