மீனவர் பிரச்னையில் நிரந்தரத் தீர்வே மத்திய அரசின் விருப்பம்

மீனவர் பிரச்னையில் நிரந்தரத் தீர்வையே மத்திய அரசு விரும்புகிறது என்றார் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

இது தொடர்பாக சனிக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது:

மீனவர் பிரச்னையில் நிரந்தரத் தீர்வு காணப்படுவதையே மத்திய அரசு விரும்புகிறது. மீனவர் பிரச்னைக்கு நல்ல தீர்வு கிடைக்கவேண்டுமெனில் எல்லை தாண்டி மீன் பிடிப்பதை தவிர்க்க வேண்டும் என்றார் ராதாகிருஷ்ணன்.

போராட்டத்தை கைவிட்ட மீனவர்கள்: முன்னதாக, நாகை நம்பியார் நகருக்கு வந்த அமைச்சர், அங்குள்ள சமுதாயக் கூடத்தில் மீனவர்கள், பஞ்சாயத்தார்களை சந்தித்தார். அப்போது மீனவர்கள், இலங்கைச் சிறையில் உள்ள நம்பியார் நகரைச் சேர்ந்த 37 மீனவர்கள், 4 படகுகளை மீட்டுத் தர கோரிக்கை விடுத்தனர். பின்னர், மீனவர்களுக்கு பொன். ராதாகிருஷ்ணன் ஆறுதல் கூறினார்.

இதைத் தொடர்ந்து, நம்பியார் நகர் மீனவர்கள் தங்களது காலவரையற்ற வேலைநிறுத்தத்தையும், சனிக்கிழமை நடத்தவிருந்த உண்ணாவிரதப் போராட்டத்தையும் கைவிட்டனர்.

-http://www.dinamani.com

TAGS: