நியூயோர்க் நகரில் வசிக்கும் இந்திய வம்சாவளி மாணவி ஒருவர் எளிதில் உடைக்க முடியாத பாஸ்வேர்டுகளை விற்பனை செய்துவருகிறார்.
மிரா (11) என்ற இந்திய வம்சாவளி மாணவி சாதாரண வழிமுறையை பயன்படுத்தி இந்த பாஸ்வேர்ட்களை உருவாக்கி வருகிறார்.
ஐந்து பகடை காய்களை உருட்டும்போது, 5 எண்கள் கிடைக்கும் உதாரணத்திற்கு 13465 என்று வருகிறது எனில், இந்த எண்களுக்கு டைஸ் வார்த்தை பட்டியலில் (Diceware word list) இருக்கும் ஆங்கில வார்த்தை beach.
கடினமான பாஸ்வேர்ட் வேண்டுமானால் 6 டைஸ்களை உருட்டுங்கள். இல்லை எனக்கு உளவுநிறுவனங்களால் கூட உடைக்க முடியாத பாஸ்வேர்டு வேண்டும் என்றால் 7 டைஸ்களை உருட்டுங்கள்.
7 டைஸ்கள் மூலம் கிடைக்கும் பாஸ்வேர்டை 2030-ம் ஆண்டுவரை உடைக்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த எளிய வழிமுறையை பயன்படுத்தி தான் மிரா பாஸ்வேர்டுகளை உருவாக்கி விற்பனை செய்து வருகிறார்.
-http://www.newindianews.com