பாகிஸ்தானுக்கும், இஸ்லாமியர்களுக்கும் பிரச்னைக்குரியவராக இருக்கிறார் மோடி: பர்வேஸ் முஷாரப்

இந்திய பிரதமர் நரேந்திர மோடி, பாகிஸ்தானுக்கும், இஸ்லாமியர்களுக்கும் பிரச்னைக்குரியவராக இருக்கிறார் என்று பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் கூறியுள்ளார்.  சேனல் 92வுக்கு அவர் அளித்த பேட்டியில் மேலும் கூறியிருப்பதாவது: –

இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கும் இடையே தற்போது நடக்கும் பிரச்னை ஆளும் கட்சியின் கொள்கை அடைப்படையிலானது அல்ல. தனிப்பட்ட பிரச்னை. நாங்கள் காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க என இருகட்சிகள் ஆளும்போது ஒப்பந்தம் செய்துள்ளோம்.

மேலும் இது இருகட்சிகளுக்குள் இருக்கும் பிரச்னையில்லை. ஆனால் தனிப்பட்ட பிரச்னையாக இருக்கிறது. தற்ப்போது உள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி பாகிஸ்தான் மற்றும் இஸ்லாமியர்களுக்கு என்ன நடந்தாலும் கவலையில்லை என்ற கொள்கையில் இருக்கிறார்.

ஆனால் இதற்குமுன் பிரதமராக இருந்த பா.ஜ.கவை சேர்ந்த வாஜ்பாயி எளிமையான விசித்திரமான மனிதர். அவர் மிகவும் நேர்மையாக பிரச்னைகளை தீர்க்க முன்வந்தார். சோனியா காந்தியும் அதே போல் பிரச்னைகளை தீர்க்க வேண்டும் என்பதில் கவனமாக இருந்தார் என கூறினார்.

மேலும் இந்தியாவில் நடந்த தாத்ரி சம்பவம் குறித்து பேசும்போது பயங்கரவாத சக்திகள் பின்னால் இருந்து செயல்படுவதாக கூறினார்.

அதோடு சிவசேனா ஒரு பயங்கரவாத அமைப்பாகும். பாகிஸ்தான் அரசு இந்த இயக்கத்தை பயங்கரவாத அமைப்பாக அறிவிக்க ஐ.நா சபையில் முறையிட்டுள்ளது என கூறினார்.

-http://www.dinamani.com

TAGS: