மரபணு மாற்றம் செய்யப்பட்ட கடுகை அனுமதிக்காதீர்: மத்திய அமைச்சர்களுக்கு அன்புமணி கடிதம்

சென்னை: மரபணு மாற்றம் செய்யப்பட்ட கடுகு பயிரை அனுமதிக்கக் கூடாது என்று கூறி பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் மத்திய அமைச்சர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இது குறித்து பாமக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது,

 

Anbumani urges center to reconsider decision to approve GM mustard

டெல்லி பல்கலைக்கழகத்தின் மரபணு பொறியியல் பிரிவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் மரபணு மாற்றம் செய்யப்பட்ட கடுகு வகையை உருவாக்கியிருக்கிறார்கள். இதற்கு

மத்திய அரசு ஒப்புதல் அளிக்க உள்ளது.

இந்த கடுகு வகைக்கு ஒப்புதல் அளிக்கக் கூடாது; அதை தடை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா, சுற்றுச்சூழல் துறை

அமைச்சர் பிரகாஷ் ஜாவ்தேகர் ஆகியோருக்கு பா.ம.க. முதலமைச்சர் வேட்பாளர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் கடிதம் எழுதியுள்ளார்.

மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து அந்த கடிதத்தில் அவர் விரிவாக விளக்கியுள்ளார் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-http://tamil.oneindia.com

TAGS: