இந்தியாவில் தீவிரவாதம் அதிகரித்துள்ளதாம்: பாகிஸ்தான் முதலை கண்ணீர்

pakpakஇஸ்லாமாபாத், நவ.6- இந்தியாவில் தீவிரவாதம் அதிகரித்து உள்ளதாக பாகிஸ்தான் அரசு கவலை தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் தீவிரவாதிகளின் சொர்க்கபுரியாக திகழ்கிறது என்பது உலகமே அறிந்த விஷயம். ஆனால் தன்முதுகில் மேல் இருக்கும் மண்ணை பார்க்க முடியாத பாகிஸ்தான், இந்தியாவை குற்றம் சொல்வதை ஒருபோதும் நிறுத்தியது கிடையாது.

இப்போது பாகிஸ்தானுக்கு புதிய கவலை ஏற்பட்டு உள்ளது. அது என்னவென்றால் “இந்தியாவில் தீவிரவாதம் அதிகரித்து உள்ளது” என்பதுதானாம். இது செய்தியை படிப்பவர்களுக்கே கேலிக்குரியது. இந்தியாவில் நடத்தப்பட்ட தாக்குதல்களின் போது சிக்கியவர்கள் அனைவரும் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் என்று தெரியவந்தும், பாகிஸ்தான் கபட நாடகத்தை தொடர்ந்து கொண்டுதான் உள்ளது.

சமீபத்தில்கூட ஜம்மு-காஷ்மீரில் உள்ள தீவிரவாத இயக்கங்களுக்கு பாகிஸ்தான் உதவிசெய்யும் விவகாரத்தில் ஐ.நா.சபையில் பாகிஸ்தானிற்கு இந்தியா சமட்டியடி கொடுத்தது. இருப்பினும் இந்தியாவில் தீவிரவாதம் அதிகரித்து உள்ளது என்று அபாண்ட குற்றச்சாட்டை பாகிஸ்தான் தற்போது மீண்டும் முன்வைத்துள்ளது.

இதுதொடர்பாக, பாகிஸ்தான் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் காசி கலிலுல்லாஹ் பேசுகையில், “இந்தியாவில் சமீபத்தில் தீவிரவாதம் அதிகரித்து உள்ளதில் பாகிஸ்தான் மிகவும் கவலை அடைந்துள்ளது. சர்வதேச சமுதாயம் இதனை கவனத்தில் எடுக்கவேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்,” என்று கூறியுள்ளார்.

“இந்தியாவில் தீவிரவாத இயக்கங்களால் பாகிஸ்தான் பிரமுகர்கள் மற்றும் கலைஞர்கள் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சிகளில் இடையூறு செய்யப்பட்டது தொடர்பாக நாங்கள் கவலை அடைந்து உள்ளோம்,” என்றும் கூறியுள்ளார்.

-http://www.maalaimalar.com

TAGS: