பாடகர் கோவனை காவலில் எடுத்து விசாரிக்க உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என பாடல் மூலம் அரசை விமர்சித்த மக்கள் கலை இலக்கிய கழக நிர்வாகி தேசத்துரோக வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், அவருக்கு நக்சலுடன் தொடர்பு இருப்பதாகக் கூறி 2 நாள் பொலிஸ் காவலில் விசாரிக்க உயர்நீதிமன்றத்தில் அனுமதி கேட்டுள்ளனர்.
இதனை எதிர்த்து கோவன் அவசர மனுத்தாக்கல் செய்துள்ளார். அதனை விசாரித்த நீதிபதி சி.டி.செல்வம், நக்சலுடன் தொடர்பு இருப்பதற்கு முகாந்திரம் இல்லை என்ற வாதத்தை ஏற்று 2 நாள் பொலிஸ் காவலுக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.

-http://www.newindianews.com

























