புதுடெல்லி: பாரம்பரியம் மிக்க ஜல்லிக்கட்டை இந்த ஆண்டு நடத்த தேவையான சட்டத்திருத்தம் கொண்டுவர மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவ்டேகர் தெரிவித்துள்ளார். டெல்லியில் தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் பீகார் பேரவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி பெரும்பாண்மை பலத்துடன் வெற்றி பெரும் என்றார். ஜல்லிக்கட்டு தொடர்பான கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த அவர். ஜல்லிக்கட்டு மற்றும் ரேக்ளா ரேஸ் ஆகியவை பாரம்பரியமிக்க விளையாட்டுகள் என்றார்.
எனவே வரும் பொங்கலுக்கு ஜல்லிக்கட்டை நடத்த உரிய சட்டத்திருத்தும் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டதாக ஜவ்டேகர் தெரிவித்தார். உச்சநீதிமன்றத்தின் அனுமதியுடன் பாரம்பரியமிக்க போட்டிகளை நடத்த மத்திய அரசுகள் ஏற்பாடுகள் செய்து வருவதாகவும் அவர் கூறினார். கேரளா உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றிருப்பதன் மூலம் அம்மாநிலத்திலும் பாஜக காலுன்றி இருப்பது பிரதமர் மோடிக்கு கிடைத்த வெற்றி என்றும் ஜவ்டேகர் தெரிவித்தார்.
-http://www.dinakaran.com