தொடர் கனமழையால் தமிழகத்தில் 112 பேர் பலி

tn_rain_001தமிழகத்தில் கனமழையால் பலியானவர்களின் எண்ணிக்கை 112 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தொடர் கனமழை பெய்து வருகிறது.

வானிலை ஆய்வு மையம், இன்று முதல் 3 நாட்களுக்கு தமிழகத்தின் கடலோர பகுதிகளில் கனமழை பெய்யும் என்று அறிவித்துள்ளது.

கனமழையால் பல்வேறு பகுதிகளில் வீடுகள் இடிந்தும், மரங்கள் விழுந்தும் பலர் பலியாகியுள்ளனர்.

தமிழகத்தில் கனமழைக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 112 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் தலைநகர் சென்னையில் உள்ள பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளதால் சாலை போக்குவரத்து பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

குடியிருப்பு பகுதிகள் மட்டுமல்லாது தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள்ளும் மழை நீர் தேங்கியுள்ளதால் சுகாதார பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

இந்த தொடர்மழையால் கடலூர் தான் தமிழகத்திலேயே பெரும் பாதிப்படைப்படைந்துள்ளது.

மேலும், தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

-http://www.newindianews.com

TAGS: