செம்மரக்கட்டை கடத்தல் கும்பல் தலைவன் ஆந்திர போலீசாரிடம் ஒப்படைப்பு

semmaram_001மொரீஷியசில் சர்வதேச போலீசாரால் கைது செய்யப்பட்ட சர்வதேச செம்மரக்கட்டை கடத்தல் கும்பல் தலைவர் கங்கி ரெட்டியை ஆந்திர மாநில போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவரை பலத்த பாதுகாப்புடன் ஆந்திர போலீசார் விமானத்தில் ஐதராபாத்துக்கு கொண்டு வந்தனர். கங்கி ரெட்டியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் வதலுரு என்ற இடத்தை சேர்ந்தவர் கொல்லம் கங்கி ரெட்டி. இவர் ஆந்திராவில் இருந்து செம்மரங்களை வெட்டி வெளிநாடுகளுக்கு கடத்தி வந்தார். இவர் மீது 28 செம்மரக்கட்டை கடத்தல் வழக்குகள் பல்வேறு போலீஸ் நிலையங்களில் பதிவாகி உள்ளது. இதில் 20 வழக்குகளில் ஜாமீனில் வெளியே வரமுடியாத பிரிவுகளில் தொடரப்பட்ட வழக்குகளும் நிலுவையில் உள்ளன.

வெளிநாடுகளில் பதுங்கியிருந்து செம்மரக்கட்டைகளை கடத்தி வந்த கங்கி ரெட்டி கடந்த 2003–ம் ஆண்டு சித்தூர் மாவட்டம் திருப்பதி அருகே அலிபிரி என்ற இடத்தில் தற்போதைய ஆந்திர முதல்–மந்திரி சந்திரபாபுநாயுடுவை கொல்ல நடந்த சம்பவத்தில் முக்கிய குற்றவாளி ஆவார்.

-http://www.nakkheeran.in

TAGS: