புதுடில்லி: பீகார் தேர்தல் முடிவு மனித நல்லிணக்கத்தை உணர்த்துகிறது என்றும், இம்மாநில மக்கள் மனித ஒற்றுமையை காட்டியுள்ளனர் ,மேலும் தேர்தல் முடிவு சகிப்புத்தன்மையின்மைக்கு எதிரானது என்றும் புத்த மத தலைவர் தலாய்லாமா கூறியுள்ளார் . பீகார் தேர்தலில் ஏற்பட்டுள்ள முடிவுகள் வரவேற்கத்தக்கது, இது மிக நன்மை தருவதாகும், மனித நல்லிணக்கம் இருப்பதால் உலக அளவில் இந்தியா மத சகிப்புத்தன்மை கொண்ட நாடு என்பதை உணர்த்துகிறது அனைத்து மதத்தினரும் தனிப்பட்ட மனிதர்களுக்கும் உரிய மரியாதை அளிக்கப்படுகிறது மத சகிப்புத்தன்மை என்பது மதவாதிகளுக்கு அளிக்கும் மதிப்பு அல்ல, மக்களுக்கு அளிக்கும் மதிப்பு ஆகும் . இதனால் புத்த மதம் இந்தியாவில் தோன்றியது. என்றார் .
இந்தியாவில் வாழும் இந்துக்கள் எப்போதும் அமைதி, நல்லிணக்கத்தையே விரும்புவர், ஒற்றுமைக்கு துணையாக இருப்பர் இதனை பீகார் மக்கள் உணர்த்தியுள்ளனர் .
பயங்கரவாதம் குறித்து கேள்வி எழுப்புகையில்; நாட்டில் அமைதிச்சூழல் நிலவ வேண்டும் இது ஒவ்வொரு வீட்டில் இருந்து கிளம்ப வேண்டும், பள்ளிகள் மற்றும் பல்கலைகளில் இருந்து இந்த அமைதியை நாம் உருவாக்க முடியும் இவ்வாறு தலாய்லாமா கூறினார்.
-http://www.dinamalar.com