சென்னையில் 40 ஆண்டுகளில் இல்லாத கனமழை

rainசென்னை: சென்னை தாம்பரத்தில் ஒரே நாளில் 33 செ.மீ அளவிற்கு மழை கொட்டித் தீர்த்துள்ளது. இது சென்னையில் கடந்த 40 ஆண்டுகளுக்குப் பின்னர் கொட்டிய மழை அளவாகும். திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் 37 செ.மீ. மழை அளவு பதிவாகியுள்ளது. நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் பதிவாகியுள்ள அதிகபட்ச மழை அளவாகும். சென்னை நகரில் கடந்த 1976ம் ஆண்டு நவம்பர் மாதம் 25-ந் தேதி 45 செ.மீ. மழை பெய்தது. இதுதான் அதிகபட்ச மழை அளவாக இருந்து வருகிறது. 40 ஆண்டுகளுக்கு பிறகு சென்னை நகரில் இப்போது அதிக மழை பெய்து இருக்கிறது. திங்கட்கிழமையன்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் சென்னை புறநகர் பகுதியான தாம்பரத்தில் 33 செ.மீ. மழை பெய்து உள்ளது. இதேபோல் காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரத்திலும் 33 செ.மீ. மழை பெய்து உள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் அதிகபட்சமாக 369 மில்லி மீட்டர் மழை கொட்டித்தீர்த்தது. பொன்னேரியை அடுத்த ஆமூர் ஊராட்சி முஸ்லிம்நகரில் உள்ள வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. இதனால் அங்கு உள்ள பொதுமக்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர். அவர்களுக்கு உணவுகள் வழங்கப்பட்டன. பொன்னேரி பள்ளம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அரசு மகளிர் பள்ளியில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

மீஞ்சூர் பகுதியில் பலத்த மழை காரணமாக வீடுகளுக்கு உள்ளேயும், விளை நிலங்களிலும் மழைநீர் தேங்கியது. இதனால் அங்கு பயிரிட்டு இருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கின. விச்சூர் கிராமத்தில் உள்ள வீடுகள், சிப்காட் தொழிற்பேட்டைகளில் வெள்ளம் புகுந்தது. பொக்லைன் எந்திரம் மூலம் வெள்ள நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது.

மீஞ்சூர் பேரூராட்சி பகுதிகள் முழுவதும் மழைநீரால் சூழப்பட்டு உள்ளது. மீஞ்சூர் ஏரிக்கரை பகுதியில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர். நெய்தவாயல் ஊராட்சி பகுதி முழுவதும் மழைநீரால் சூழப்பட்டு தடுப்பணைகள் நிரம்பி வழிகின்றன.

செங்கல்பட்டு 32 செ.மீ., தாமரைப்பாக்கம் 31 செ.மீ., புழல் 30 செ.மீ., செம்பரம்பாக்கம், செங்குன்றம், சோழவரம் தலா 28 செ.மீ., அளவிற்கு மழை பதிவாகியுள்ளது. காஞ்சிபுரம், மரக்காணம், கேளம்பாக்கம், சென்னை விமானநிலையம் தலா 27 செ.மீ., ஆவடி, தரமணி தலா 26 செ.மீ., சென்னை 25 செ.மீ., மாதவரம் 24 செ.மீ., பூந்தமல்லி, ஸ்ரீபெரும்புதூர், செம்பரம்பாக்கம் தலா 23 செ.மீ., பூந்தமல்லி 22 செ.மீ., மதுராந்தகம், கொளப்பாக்கம், உத்திரமேரூர் தலா 21 செ.மீ. மழை பெய்து உள்ளது.

அரக்கோணம், காட்டுக்குப்பம், எண்ணூர் தலா 20 செ.மீ., திருவேற்காடு, பூண்டி, திருவள்ளூர் தலா 19 செ.மீ., திருத்தணி 18 செ.மீ., பள்ளிப்பட்டு 17 செ.மீ., சோளிங்கர் 16 செ.மீ., கலவை 15 செ.மீ., காவேரிப்பாக்கம், செய்யார், வேலூர் தலா 14 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.

வானூர், திருக்கோவிலூர் தலா 13 செ.மீ., ஆர்.கே.பேட்டை 12 செ.மீ., செய்யூர், விழுப்புரம், திண்டிவனம், ஆலங்காயம், புதுச்சேரி தலா 11 செ.மீ., பரங்கிப்பேட்டை, செஞ்சி, வந்தவாசி தலா 9 செ.மீ., குடியாத்தம் 8 செ.மீ., ஆம்பூர், கடலூர், ஆரணி, முசிறி, மைலம், திருவிடைமருதூர் தலா 7 செ.மீ., குடவாசல், வாலாஜா, ஸ்ரீமுஷ்ணம், சிதம்பரம், வாணியம்பாடி தலா 6 செ.மீ., நெய்வேலி, சாத்தனூர், தரங்கம்பாடி, விருத்தாசலம், திருவாரூர், ஜெயங்கொண்டம், ஆணைக்காரன்சத்திரம் தலா 5 செ.மீ. மழை பதிவாகி இருக்கிறது.

வேதாரண்யம், நாகப்பட்டினம், நன்னிலம், வலங்கைமான், சீர்காழி, ராமேசுவரம், சங்கராபுரம், சிதம்பரம், உளுந்தூர்பேட்டை, போளூர், ஊட்டி, திருத்துறைப்பூண்டி தலா 4 செ.மீ., கும்பகோணம், பெரம்பலூர், நீடாமங்கலம், திருவையாறு, பாபநாசம், மயிலாடுதுறை, திருவண்ணாமலை, ஆலங்குடி, காரைக்கால், தஞ்சாவூர், மன்னார்குடி தலா 3 செ.மீ., கீரனூர், கள்ளக்குறிச்சி, அரியலூர், பாம்பன், செங்கம், கல்லணை, பேராவூரணி, பாடாலூர், திருக்காட்டுப்பள்ளி, ஆடுதுறை, மாரண்டஹள்ளி, குளித்துறை, ஏற்காடு, சமயபுரம், திருமயம், தர்மபுரி, அறந்தாங்கி, பேச்சிப்பாறை தலா 2 செ.மீ., திருவாடானை, கரூர், திருச்சி, கொடைக்கானல், பழனி, கந்தர்வகோட்டை, திருச்செந்தூர், தேவகோட்டை, அருப்புக்கோட்டை, சிவகிரி, சேலம், பண்ருட்டி, தர்மபுரி, ஓசூர், குளித்தலை தலா 1 செ.மீ. மழை பதிவாகியுள்ளது .

வடகிழக்குப் பருவமழையால் தமிழகம் முழுவதும் ஆறுகளில் வெள்ளப்பெருக்கெடுத்துள்ளன. அணைகள் மளமளவென நிரம்பி வருகின்றன. ஏரிகள் நிரம்பி வழிவதால் தண்ணீர் பிரச்சினைக்கோ, விவசாயத்திற்கோ தட்டுப்பாடு இல்லை என்பது ஒருபக்கம் மகிழ்சியான விசயம்தான் என்றாலும் வெள்ளத்தில் சிக்கித் தத்தளிக்கும் மக்களை பாதுகாக்க எந்த ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதே பெரும்பாலோனோரின் குற்றச்சாட்டாகும்.

TAGS: