டெல்லி: மணிப்பூரில் 18 ராணுவ வீர்ர்கள் படுகொலைக்கு காரணமான நாகாலாந்து தேசிய சோசலிஸ்ட் கவுன்சில்(கப்லாங்) அல்லது என்.எஸ்.சி.என்(கப்லாங்) அமைப்பை மத்திய அரசு தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கமாக பிரகடனம் செய்துள்ளது.
மணிப்பூரில் இந்திய ராணுவத்தினர் மீது இந்த ஆண்டின் தொடக்கத்தில் பயங்கர தாக்குதல் நடத்தப்பட்டது. வடகிழக்கு மாநிலங்களில் ராணுவத்தினர் மீது நடத்தப்பட்ட மிகப் பெரிய இத்தாக்குதலில் 18 வீரர்கள் உயிரிழந்தனர்.
இந்த சம்பவத்துக்கு அகன்ற நாகாலாந்து தனிநாடு கோரும் நாகாலாந்து தேசிய சோசலிஸ்ட் கவுன்சில்(கப்லாங் பிரிவு)தான் காரணம் என தெரியவந்தது. இந்த இயக்கத்தின் தலைவர் கப்லாங் மியான்மரில் பதுங்கியிருப்பதாக நம்பப்படுகிறது.
இதனால் மியான்மருக்குள் நுழைந்து இந்த இயக்கத்தின் முகாம்களை ராணுவத்தினர் அழித்தனர். அத்துடன் கப்லாங் பற்றிய தகவல் தருவோருக்கு ரூ7 லட்சம் சன்மானம் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் நாகாலாந்து தேசிய சோசலிஸ்ட் கவுன்சில்(கப்லாங்) பிரிவை தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கமாக உள்துறை அமைச்சகம் பிரகடனம் செய்துள்ளது.
இதே நாகாலாந்து அமைப்பின் மூய்வா பிரிவுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி அமைதி ஒப்பந்தம் மேற்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் கையால் ஆகாத தனம். சுத்த வீராப்பு தான்– ஒரு வெங்காயமும் ஆகப்போவதில்லை– இன்னும் எத்தனை பேர் கொல்லப்படுவார்களோ? இதை அடக்க எவ்வளவு காலம்தேவை? இவங்கள் எதைத்தான் ஒழுங்காக செய்தாங்கள்–ஊழலும் ஜாதி மத உயர்வு தாழ்வு மிக மடத்தனமான அரசு எந்திரம் — சீனா கவனித்துக்கொண்டிருக்கிறது —