சென்னையில் மீண்டும் பலத்த மழை: வெள்ளம் வடிவது எப்போது?

sennaiசென்னை: சென்னையில் கடந்த சில தினங்களாக பெய்த கனமழையால் வெள்ளம் சூழ்ந்துள்ள நிலையில், மீண்டும் கனமழை பெய்து வருவதால் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுநிலையால் சென்னையிலும் புறநகர் பகுதிகளிலும் கனமழை கொட்டித் தீர்த்தது. பல பகுதிகளில் ஏரிகள் நிரம்பி வழிகின்றன. இந்நிலையில் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 5 ஆயிரம் கணஅடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

இதனால் அடையாறு கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கனமழையால் ஏற்பட்ட வெள்ள பாதிப்புக்களே சரியாகாத நிலையில் சென்னையில் பல இடங்களில் மீண்டும் கனமழை பெய்து வருகிறது.

கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், அசோக் நகர், சேப்பாக்கம், சூளைமேடு, நுங்கம்பாக்கம், மயிலாப்பூர், அடையாறு, சைதாப்பேட்டை, தி.நகர், தண்டையார்பேட்டை, திருவொற்றியூர், எண்ணுர் உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்து வருகிறது.

கனமழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். விழுப்புரம், புதுச்சேரி உள்ளிட்ட இடங்களிலும் கனமழை பெய்து வருகிறது.

tamil.oneindia.com

TAGS: