தமிழகத்திலும் சர்ச்சையாகும் திப்பு சுல்தான் பிறந்த நாள் விழா- திட்டவட்டமாக அனுமதி மறுக்கும் காவல்துறை!

tippu1`சென்னை: வேலூரில் திப்பு சுல்தான் பிறந்த நாள் விழா பொதுக் கூட்டம் நடத்த அனுமதித்தால் தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு கெடும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சியின் பொதுச்செயலர் இஸ்மாயில் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனுவைத் தாக்கல் செய்துள்ளார். அதில், மைசூரை ஆண்ட திப்பு சுல்தான் சுதந்திர போராட்ட வீரர்.அவரது பிறந்த நாளை முன்னிட்டு வேலூரில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கோரினோம்.

ஆனால் போலீஸ் அனுமதிக்கவில்லை. இந்த கூட்டத்துக்கு அனுமதி தர வேண்டும் என கோரியிருந்தார். நீதிபதி சுந்தரேஷ் முன்னிலையில் இம்மனு மீதான விசாரணை நடைபெற்றது. அப்போது குடியாத்தம் இன்ஸ்பெக்டர் பதில் மனுவைத் தாக்கல் செய்தார்.

அதில், கர்நாடகாவில் திப்பு சுல்தான் பிறந்த நாள் விழாவால் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்தது. வேலூர் மாவட்டம் மத உணர்வுள்ள மாவட்டம். அண்மையில்தான் ஆம்பூரில் பெரும் கலவரம் ஏற்பட்டது. திப்புசுல்தான் பிறந்த நாளை முன்வைத்து சில அமைப்புகள் பிரச்சனைகளை உருவாக்க முயற்சிப்பதாக நுண்ணறிவுப் போலீசார் தெரிவித்துள்ளனர். ஆகையால் இதற்கு அனுமதி அளிக்கக் கூடாது என தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து இம்மனு மீதான விசாரணை திங்கள்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

tamil.oneindia.com

TAGS: