மலேசியாவில் ”வணக்கம்” சொல்லி தமிழில் உரையை தொடங்கிய மோடி

modi_tamil_001கோலாலம்பூரில் இந்தியர்களிடையே இன்று உரையாற்றிய பிரதமர் மோடி தமிழில் ”வணக்கம்” சொல்லி தனது உரையைத் தொடங்கியுள்ளார்.

மலேசியா சென்றுள்ள பிரதமர் மோடி 2வது நாளான இன்று, இந்தியர்களிடையே உரை நிகழ்த்தியுள்ளார்.

வணக்கம் என்று தமிழில் தனது உரையை தொடங்கிய மோடி, எனது அருமை சகோதர சகோதரிகளே. மலேசியாவுக்கு வருவதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.

இவ்வளவு பெரிய அரங்கில் உங்கள் மத்தியில் நிற்பதில் பெருமைப்படுகிறேன்.

இந்தியா என்பது தனது எல்லையோடு நின்று விடும் நாடு அல்ல. ஒவ்வொரு இந்தியனுக்குள்ளும் இந்தியா வியாபித்து நிற்கிறது.

இந்தியா மீதான உங்களது அன்பு ஒருபோதும் சுருங்கி விடவில்லை. உங்களது ஒவ்வொரு விழாவிலும் அதை நான் காண்கிறேன்.

உங்களது அன்பும், நட்பும் மறக்க முடியாதது. உங்கள் முன்பு நான் மாபெரும் புலவர் திருவள்ளுவரின் கருத்தைச் சொல்ல விரும்புகிறேன்.

நட்பு என்பது முகத்தில் தெரியும் புன்னகை மட்டுமல்ல. மாறாக நமது இதயத்தின் அடி ஆழத்திலிருந்து வரும் அது வர வேண்டும் (”முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து அகநக நட்பது நட்பு”) என்று சொல்லியுள்ளார்.

உங்களது தாத்தாக்களில் பலர் நேதாஜியின் சுதந்திரப் போராட்டத்திற்கு உதவிக் கரம் நீட்டியவர்கள்.

இதற்காக மலாய் இந்தியர்களுக்கு சுதந்திர இந்தியா நன்றிக் கடன்பட்டுள்ளது என பேசியுள்ளார்.

– http://www.newindianews.com

TAGS: