பள்ளியிலே தொடங்கிய ஜாதி வேறுபாடு: கயிறு கட்டி ஆதிக்கம் செலுத்தும் மாணவர்கள்

schhool_caste_001மாணவர்களுக்கு ஏற்றத்தாழ்வு இருக்கக் கூடாது என்பதற்காகத்தான் பள்ளிகளில் சீருடை கொண்டு வரப்பட்டது.

ஆனால் தமிழ் நாட்டின் திருநெல்வேலி மாவடத்தில் உள்ள மாணவர்களிடம் வேறு விதமாக கயிறு மூலமாக ஜாதி வேறுபாடு நிலவுகிறது.

அது என்னவெனில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் சிலர் தங்கள் ஜாதியை வெளிப்படுத்தும் வகையில் கைகளில் பல்வேறு வண்ணங்களில் கயிறுகளை கட்டி வருகின்றனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன் வெளிச்சத்துக்கு வந்த இந்த விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இன்னும், சில மாணவர்கள் தங்கள் ஜாதியைச் சேர்ந்த தலைவர்களின் பாஸ்போர்ட் அளவு புகைப்படங்களை அரசு வழங்கும் இலவச பஸ்பாஸுக்கு பின்புறம் வைத்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

அத்தோடு நில்லாமல் வண்ணக் கயிறு கட்டி வரும் மாணவர்களுக்கும் மற்ற மாணவர்களுக்கும் பள்ளி வளாகத்திலேயே கடுமையான மோதல்களும் ஏற்பட்டு வருகின்றன. இது தொடர்பாக பல்வேறு பொலிஸ் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, மாணவர்களுக்கு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக மிழக அரசின் சமூகநலத்துறை முதன்மை செயலாளர் மற்றும் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் ஆகியோருக்கு தேசிய மனித உரிமை ஆணையம் விளக்கம் அளிக்க நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இதில் ஜாதியை வெளிப்படுத்தும் வகையில் கயிறுகளை கட்டி வரும் மாணவர்களுக்கு முதலில் எச்சரிக்கை செய்ய வேண்டும். அதன்பின்னரும் கயிறு கட்டிவந்தாலோ, ஜாதி வெறியை தூண்டும் வகையில் செயல்பட்டாலோ பள்ளியிலிருந்து சம்பந்தப்பட்ட மாணவரை நீக்கவும் தலைமையாசிரியர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டிருக்கிறது.

-http://www.newindianews.com

TAGS: