தென் இந்திய மாநிலங்களை சேர்ந்த இளைஞர்கள் ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தால் அதிகம் கவரப்பட்டுள்ளனர் என்று மத்திய உள்துறை இணை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நேற்று தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு மத்திய உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜிஜூ பேட்டியளித்துள்ளார்.
அப்போது, கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு, தெலுங்கானா, ஆந்திர பிரதேசம் போன்ற தென் இந்திய மாநிலங்களை சேர்ந்த இளைஞர்கள் ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தால் அதிகம் கவரப்பட்டுள்ளனர்.
தென் இந்திய முஸ்லீம் இளைஞர்கள்தான் ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தால் அதிகம் கவரப்படுவதாக தகவல்கள் வருகின்றன.
ஐ.எஸ் தீவிரவாதிகளால் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலை எதிர்கொள்ள இந்தியா தயார் நிலையில் உள்ளது.
ஐ.எஸ் தீவிரவாதிகளால் நமக்கு சில பிரச்சினைகள் உள்ள போதிலும், மேற்கு ஐரோப்பிய நாடுகளை போல அச்சுறுத்தல் நமக்கு இல்லை. இதற்கான பெருமை முஸ்லீம்களையும் சாரும்.
இந்த விவகாரத்தை மதத்தின் கோணத்தில் பார்ப்பதை தவிர்க்க வேண்டும் என்று பேசியுள்ளார்.
-http://www.newindianews.com
ஈழத்தில் அப்பாவி மக்களை புலிகளாக பச்சை குத்தி அவர்களை படுகொலை செய்ய துணை போன அரசாங்கம்தானே இந்த படுபாவி இந்தியா.கத்தியும் கதறியும் இந்த படுபாவி அரசியல் வாதிகளால் எங்களால் கொலையை தடுக்க முடியவில்லயே , கண்ணீர்தான் விடமுடிந்தது,அந்த கண்ணீருக்கு பதில் இந்திய சொல்லிதானே ஆகா வேண்டும்.is தீவிரவாதிகளை நான் நியாய படுத்த விரும்ப வில்லை.ஆனால் எய்தவனை (இந்தியா) எம்மால் மறக்க முடியாது ,மன்னிக்கவும் முடியாது,
தென் இந்திய மாநிலங்களில் உள்ள இளைஞர்கள் ஈர்க்கப்படுகிறார்கள் என்பதைவிட தீவிரவாத இயக்கங்களால் சுற்றி வளைக்கப் படுகிறார்கள் என்பது தான் உண்மை!
இந்தியாவுக்கு துரோகம் நினைக்காமல் கூட இருந்த ஈழ மக்களுக்கு ..இந்தியா கொடுத்த அழிவிற்கு நிச்சயம் பதில் சொல்லவேண்டும் ….சரியான சமயத்தில் முறையாக ஈழ தமிழர்கள் பதில் கொடுப்பார்கள் …எதிரிக்கு எதிரி என் நண்பன் என்ற முறையில் ….இருக்குது ஆப்பு
வடக்கு ஹிந்தியன்களுக்கு, தென் இந்தியன் மேலே எப்போதும் ஒரு வெறுப்புணர்ச்சி இருந்து கொண்டே இருக்கு.வடக்கு ஹிந்தியன் கடல் தாண்டி மீன் பிடித்து மற்ற நாடுகளிடம் மாட்டி கொண்டால் இந்தியர்கள் கைது என்று கூரும் ஹிந்தியாவின் உள்துறை அமைச்சு. அதே நேரத்தில் தென் இந்தியர்கள் மாட்டி கொண்டால் கேரளாகாரன், ஆந்திரகாரன்,கர்நாடககாரன், தமிழ்நாட்டுக்காரன் என்று கூருவார்கல்.இந்தியாவிற்கு எல்லா வகையிலும் (வரி,விற்பனை இன்னும் பல) வாரி வழங்குவது தென் இந்தியாதான்.