சென்னையின் தற்போதைய நிலை நகர வடிவமைப்பாளர்களுக்கு பாடமாக அமையும் என அமெரிக்க வல்லுனர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் பெய்து வரும் கனமழையால் மக்களின் இயல்புவாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து மழை பெய்து கொண்டிருப்பதாலும், வடிகால் வசதிகள் இல்லாத காரணத்தினாலும் வெள்ள நீர் வடிவதில் தொடர்ந்து சிக்கல் நீடிக்கிறது.
மேலும் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு பல்வேறு நாடுகளும் உதவிக்கரம் நீட்டும் நிலையில், அதற்கான காரணத்தையும் ஆராய்ந்து வருகின்றன.
இந்நிலையில் சென்னை வெள்ளப்பெருக்கு குறித்து அமெரிக்காவில் உள்ள பிரபல மிக்சிகன் பல்கலைக்கழக பேராசிரியர் அஸ்வின் புனதம்பேகர் கூறுகையில், சென்னை வெள்ளப்பெருக்கு இந்திய அரசு எந்திரத்துக்கு மிகப்பெரும் எச்சரிக்கை மணியை ஒலித்துள்ளது.
இந்திய நகர வடிவமைப்பாளர்களுக்கு இதுஒரு பாடமாக அமைந்துள்ளது. பருவநிலை மாற்றம் மற்றும் தேசிய பேரழிவுகளை சமாளிக்கும் வகையில் திட்டங்களை மேம்படுத்த அறைகூவல் விடுப்பதாகவும் இந்த வெள்ளப் பெருக்கு அமைந்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமின்றி தேசிய பொருளாதார வளர்ச்சியில் மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும் எனவும் அமெரிக்க வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
-http://www.newindianews.com