சென்னையில் மழையால் ஏற்பட்ட இழப்பு ரூ.1 லட்சம் கோடி? ஷாக் தரும் புள்ளி விவரம்

ccc1சென்னை: தமிழகத்தில், 100 ஆண்டுகளுக்கு பிறகு பெரிய அளவில் மழை கொட்டித் தீர்த்துள்ளதால், ரூ.1 லட்சம் கோடி அளவுக்கு இழப்பீடு ஏற்பட்டுள்ளதாக பொருளாதார நிபுணர்கள் கணக்கிட்டுள்ளனர்.

கன மழை காரணமாக, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலுார் மாவட்டங்களில், 14 லட்சம் மக்கள், முகாம்களில் தங்கி உள்ளனர். சென்னை மாநகராட்சியின் கணக்கு படி, மாநகரிலுள்ள 11 லட்சம் கட்டடங்களுக்கு வீட்டு வரி வசூலிக்கப்படுகிது. ஒரு கட்டடத்தில், குறைந்தது ஒரு குடும்பம் முதல், அதிகபட்சம், ஐந்து குடும்பங்கள்வரை வசித்து வருகின்றன.

இந்த கணக்குபடி, 30 லட்சம் குடும்பங்கள் வசிக்கும் வீடுகளில், வெள்ள நீர் புகுந்து அனைத்து உடைமைகளும் நாசமாகி விட்டன. ஒரு குடும்பத்திற்கு, குறைந்தபட்சம், மூன்று லட்சம் ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது என்ற கணக்குப்படி பார்த்தாலும், 30 லட்சம் குடும்பங்களுக்கு, ஒட்டு மொத்தமாக, ஒரு லட்சம் கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது.

இது தவிர வணிக நிறுவனங்கள், கிடங்குகள், ஹோட்டல்கள், கடைகள், சிறு,நடுத்தர, குறுந்தொழில்கள், ஒரு மாதத்திற்கு மேலாக முடங்கிக் கிடக்கின்றன. மக்களின் உழைக்கும் திறனும், வீணாகியுள்ளது.

எனவே, ஒட்டுமொத்த பாதிப்புகளையும் கருத்தில் கொண்டால், தொடர் மழையால் ஏற்பட்ட பாதிப்பு, ஒரு லட்சம் கோடி ரூபாயை தாண்டும் என்கின்றனர், பொருளாதார நிபுணர்கள்.

tamil.oneindia.com

TAGS: