வெள்ள நிவாரணப் பணிகளில் தமிழக அரசு மீது பொதுமக்கள் மிகக் கடும் அதிருப்தி

rain-chennaiசென்னை: வெள்ள நிவாரணப் பணிகளை தமிழக அரசு கையாண்ட விதம் குறித்து பொதுமக்கள் அதிகம் பேர் மிகக் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியிருப்பதாக நக்கீரன் வாரம் இருமுறை ஏடு நடத்திய சர்வேயில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரலாறு காணாத பெருமழை வெள்ளத்தால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்கள் பேரிழப்பை சந்தித்துள்ளன. பல லட்சம் மக்கள் பெரும் துயரத்துக்குள்ளாகியுள்ளனர். இந்நிலையில் மழையால் பாதிக்கப்பட்ட மற்றும் பாதிக்கப்படாத பகுதிகளில், தமிழக அரசின் வெள்ள நிவாரணப் பணிகள், நிவாரண உதவிகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை முன்வைத்து நக்கீரன் வாரம் இருமுறை ஏடு ஒரு சர்வே நடத்தி முடிவுகளை வெளியிட்டுள்ளது. அதன் விவரம்:

‘வெள்ள நிவாரணப் பணிகளை தமிழக அரசு எப்படி கையாண்டது’ என்பது குறித்த கேள்விக்கு படுமோசம்- 34%; மோசம்-30% என மொத்தம் 64% பேர் கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளனர். பரவாயில்லை என 28% பேரும் சிறப்பாக இருந்தது என 8% பேர் மட்டும் கருத்து கூறியுள்ளனர்.

ஜெயலலிதா அறிவித்துள்ள நிவாரணத் தொகை?குறித்த கேள்விக்கு போதாது என 57%; எதிர்பார்த்த அளவு இல்லை என 28%; போதுமானது என 15% பேரும் தெரிவித்துள்ளனர்.

அரசின் செயல்பாடு, கட்சிகள் செயல்பாடு, தன்னார்வலர்கள் செயல்பாடு எது சிறப்பாக இருந்தது என்ற கேள்விக்கு தன்னார்வலர்கள் என 65% பேரும் அரசியல் கட்சிகள் என 18% பேரும் தெரிவித்துள்ளனர். 3வதாகத்தான் அரசின் செயல்பாடு சிறப்பாக இருந்தது என 17% பேர் மட்டும் தெரிவித்திருக்கின்றனர்.

வெள்ள நிவாரணத்தின் அடிப்படையில் தேர்தலில் வாக்களிப்பீர்களா? என்பதற்கு ஆம் என 44% பேர் தெரிவித்துள்ளனர். இல்லை என 32% பேரும் கருத்து இல்லை என 24% பேரும் கூறியுள்ளனர்.

வெள்ள நிவாரணப் பணிகளை தமிழக அரசு எப்படி கையாண்டது என்ற கேள்விக்கு மோசம் என 32%; பரவாயில்லை என 28% பேர் கருத்து தெரிவித்துள்ளனர். படுமோசம் என 23%; சிறப்பாக என 17% பேரும் கருத்து தெரிவித்திருக்கின்றனர்.

-http://tamil.oneindia.com
TAGS: