நியூயார்க், டிச.22- உலகிலேயே வேகமாக வளரும் பொருளாதார நாடாக இன்னும் 10 ஆண்டுகளில் இந்தியா இருக்கும் என உலகின் புகழ்பெற்ற ஹார்வர்டு பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. தெற்கு ஆசிய நாடுகளை பொருத்தவரை சீனா தொடர்ந்து பொருளாதாரத்தில் சரிவையே சந்திக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, அங்குள்ள சர்வதேச நாடுகளுக்கான வளர்ச்சி மையம் (CID) வெளியிட்டுள்ள புள்ளிவிபர தகவல்கள் பின்வருமாறு:-
ஆண்டுக்கு 7 சதவீதம் என்ற அளவில் சிறப்பான பொருளாதார வளர்ச்சியை இந்தியா அடையும். ஆனால், சீனாவின் பொருளாதார வளர்ச்சியானது 4.3 சதவீதம் என்ற அளவிலேயே இருக்கும். குறிப்பாக, கிழக்காசிய பகுதியில் உள்ள உகாண்டா, தான்சானியா, கென்யா நாடுகளின் பொருளாதார வளர்ச்சி 5.5 சதவீதமாக இருக்கும். பிலிப்பைன்ஸ், மலேசியா, இந்தோனேசியா, வியட்நாம் ஆகிய தெற்காசிய நாடுகளும் சர்வதேச சராசரியை விட அதிகமாகன அளவில் பொருளாதாரத்தில் தொடர்ந்து முன்னேறும். அமெரிக்கா ஆண்டுக்கு 2.8 சதவீதமும், பிரிட்டன் 3.2 சதவீதமும், ஸ்பெயின் 3.4 சதவீதமும் பொருளாதாரத்தில் ஆண்டுதோறும் வளர்ச்சியடையும். எனினும், ஜெர்மனி மற்றும் இத்தாலி நாடுகளின் பொருளாதாரம் சரிவடையும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே, 2016 மற்றும் 2017-ம் ஆண்டுகளில் இந்தியா உலகின் வேகமான பொருளாதாரமாக இருக்கும் என அமெரிக்கா தெரிவித்திருப்பது நினைவுகூரத்தக்கது.
-http://www.maalaimalar.com


























சரி நம்பிட்டோம்