தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த அவசரச் சட்டம் கொண்டு வரும்படி பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.பொங்கல் பண்டிகை மிக அண்மையில் வரவுள்ளதால், தமிழக மக்கள் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக் காளைகள் போட்டிகளை நடத்தவும், காணவும் மிக ஆவலாக உள்ளனர். இது தமிழர்களின் 100 ஆண்டுகளுக்கு மேற்பட்ட விளையாட்டு, அதோடு இந்த விளையாட்டு இதிகாசங்களில் கூட குறிப்பிடப்பட்டு உள்ளது என்று ஜெயலலிதா விளக்கமாகக் கடிதம் எழுதியுள்ளார்.மேலும், இது மிருக வதைச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து தமிழகத்தில் இந்த வருடம் ஜல்லிக்கட்டுப் போட்டிகளைக் கொண்டாடும் வகையில் சிறப்பு நாடாளுமன்றத்தைக் கூட்ட வேண்டும் என்று குப்றிபிட்டு உள்ளார்.
மேலும், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மறுசீராய்வு செய்ய தமிழக அரசு தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனு நிலுவையில் உள்ள நிலையில், மத்திய அரசு தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த சிறப்பு அவசரச் சட்டத்தையாவது பிறப்பிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார்.
-http://4tamilmedia.com
2016 தேர்தலுக்கு தமிழனின் ஓட்டு அவசியம் ! ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த அவசரச் சட்டம், போன முறை தமிழ் ஈழம் அமைத்தே ஆகவேண்டும் ! இலை மலர்ந்தால் ஈழம் மலரும் ! இதை தமிழர்கள் மறக்க முடியும்மா ? 2016 ரில் , ஆ தி மு கா , தி மு கா வை இடம் தெரியாமல் மக்கள் செய்து விடுவார்கள் !