நடிகர் சிம்பு, அனிருத்திற்கு ஆதரவாக தமிழ்நாடு ஆண்கள் பாதுகாப்பு சங்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு ஆண்கள் பாதுகாப்பு சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நடிகர் சிம்புவால் பாடப்பட்டதாகவும், இசையமைப்பாளர் அனிருத்தால் இசையமைக்கப்பட்டதாகவும் வலைதளத்தில் சில விஷமிகளால் ‘பீப்’ பாடல் என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த பாடலுக்கு சிம்பு மற்றும் அனிருத்தே காரணம் என கூறியும், அவர்களுக்கு எதிராக பல மகளிர் குழுக்களால் தமிழகம் முழுக்க ஆங்காங்கே திட்டமிட்டு பல கண்டன போராட்டங்கள் சட்டத்திற்கு விரோதமாக நடத்துவது, அவர்களது வாழ்க்கையில் ஒரு அசாதாரண சூழ்நிலையை உருவாக்கியுள்ளது.
மேலும், இந்த ‘பீப்’ பாடல் சிம்பு, அனிருத் ஒப்புதல் இன்றி விஷமிகளால் வெளியிடப்பட்டுள்ளது என்ற விளக்கத்தையும் ஏற்காமல், அவர்கள் ஆண்கள் என்ற ஒரே காரணத்திற்காக இதுபோன்ற திட்டமிட்டு அவர்களுக்கு எதிராக புனையப்படும் செயல்கள் மிகவும் கண்டனத்திற்குரியது.
சிம்பு மற்றும் அனிருத் ஆகியோருக்கு எதிராக சட்டத்திற்கு விரோதமாக செயல்படுபவர்களை தமிழ்நாடு ஆண்கள் பாதுகாப்பு சங்கம் வன்மையாக கண்டிக்கிறது என தலைவர் டி.அருள்துமிலன், பொதுச்செயலாளர் எஸ்.மதுசூதனன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
-http://www.newindianews.com
பொரிக்கிகளுக்கும் சில மந்தைகள் எலும்பு துண்டுகளுக்காக இருக்குமல்லவா அவைகளில் ஒன்று தான் இது!! ,…..ஆசிரியப்படுவதில் ஒன்றுமில்லை ..டேய் ஆண்கள் சங்கம் என்று கூறிக்கொண்டு ஆண்களை கேவலபடுததிங்கடா ………போடும் எலும்பு துண்டுகளை பொரிக்கிகொண்டு மூடிக்கொண்டு இருங்கடா….ஒ ஒ ஒ
பொறுக்கித்தின்ன எலும்பு துண்டுக்கான நன்றி கடனோ …..
போராட்டம் நடத்தும் மாதர்களே
முதலில் நீங்கள் முறையாக உடுத்துங்கள்
அப்புறம் ஆபசத்தை பற்றி பேசலாம்
இருவரும் பொது மன்னிப்பு கோரினால் பெருமனதோடு தமிழ் மக்கள் இவர்களை மன்னிக்கலாம் .மீண்டும் இது போன்றே நிகழாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் .தவறு செய்த ஒரு தமிழனை மன்னித்து தூக்கி விடுவது இன்னொரு தமிழனின் கடமையாகும் .
போதும் ….கொடுத்த அவமானம் போதுமானது …..ஒரு தமிழன் சொன்ன ஒரு சொல்லுக்கு கொடுத்த பாடத்தை..இனி வேறு இனத்தின் நடிகனுக்கும் கொடுக்க வேண்டும் .இரண்டு அர்த்தம் வசனங்கள் ..ஒருத்தியை 3 பேர் வச்சிகிரமதரி.கதை ..அப்பாவை அப்பன் என்று சொல்வது .,பெண் நடக்கும் பொது சூத்தை காட்டுவது..படுக்கை அறையில் கை கோர்த்துக்கொண்டு படுப்பது /.நீ ஒண்ணுக்கும் லாக்கி இல்லை என்பது .இது போன்ற இன்னும் பல சொல்லலாம் இனி இது எல்லாம் வரகூடாது ./