உலகளவில் இந்திய பெண்களே கருச்சிதைவு மற்றும் கருக்கலைப்பால் அதிகளவில் பாதிக்கப்படுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
மும்பையைச் சேர்ந்த மகப்பேறியல் மருத்துவரான அமீத் என்பவரால் சுமார் 2400 பேரிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் இந்தியப் பெண்களில் சுமார் 32 சதவீதம் பேர் கருச்சிதைவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
உலகளவில் 10 சதவீத பெண்கள் உரிய மருத்துவ வசதிகள் இல்லாமல் கருச்சிதைவு அல்லது தொடர்ச்சியாக கருக்கலைப்பு மேற்கொள்வதாக இந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
மருத்துவர் அமீத் இதுகுறித்து கூறுகையில், தொடர்ச்சியான கருச்சிதைவால் இந்தியாவில் 7.46 சதவீதம் பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், இதற்கு முக்கிய காரணமாக மரபணு, வரலாற்று ரீதியான காச நோய் போன்றவை ஆகும் என்றும், இதன் மூலம் பெண்களின் கருப்பைகளுக்கு பாதிப்பு ஏற்படுகிறது எனவும் தெரிவித்துள்ளார்.
-http://www.newindianews.com

























