ஆசியாவிலேயே பத்திரிகையாளர்களுக்கு பாதுகாப்பற்ற நாடு இந்தியா தான்: சர்வதேச அமைப்பு தகவல்

journalist_danger_001ஆசியாவிலேயே, இந்தியாதான் பத்திரிகையாளர்களுக்கு பாதுகாப்பற்ற நாடாக விளங்குவதாக சர்வதேச அமைப்பு ஒன்று தெரிவித்துள்ளது.

பிரான்ஸை தலைமையிடமாக கொண்டு செயல்படும் எல்லைகள் இல்லாத நிருபர்கள்(Reporters without Borders) என்ற சர்வதேச அமைப்பு தனது ஆண்டறிக்கையை வெளியிட்டுள்ளது.

அதில், ஆசியாவிலேயே ஊடகவியலாளர்கள் மற்றும் பத்திரிகையாளர்களுக்கு பாதுகாப்பற்ற நாடாக இந்தியா உள்ளதாக தெரிவித்துள்ளது.

மேலும் 2015 ஆம் ஆண்டில் இது வரை 9 பத்திரிகையாளர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் போன்ற தீவிரவாத அச்சுறுத்தல் உள்ள நாடுகளை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

பத்திரிகையாளர்கள் மீதான வன்முறையை கட்டுப்படுத்த இந்திய அதிகாரிகள் தவறி விட்டனர் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் உலகளவில் 40 சதவீத ஊடகவியலாளர்கள் ஐ.எஸ்.ஐ.எஸ். மற்றும் அல்கொய்தா போன்ற தீவிரவாத அமைப்புகளால் தான் கொல்லப்படுகின்றனர் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

-http://www.newindianews.com

TAGS: