வாகனக் கட்டுப்பாடு: சாத்தியமே இல்லாததை சாதித்துள்ளது தில்லி: கேஜ்ரிவால்

ஒற்றை, இரட்டைப் படை எண்கள் கொண்ட கார்களை மாற்று நாட்களில் இயக்கும் சோதனை முயற்சி தில்லியில் இன்று துவங்கியுள்ளது. இது சாத்தியமில்லாத ஒன்று, இதனை தில்லி சாதித்துக் காட்டியுள்ளது என்று முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் கூறியுள்ளார்.

தில்லியின் மிக மோசமான காற்றுமாசுபாட்டைக் கட்டுப்படுத்தும் வகையில் இந்த திட்டம் 15 நாட்களுக்கு தில்லி அரசால் சோதனை முறையில் கொண்டு வரப்பட்டுள்ளது.

மாநில அரசின் இந்த திட்டத்துக்கு பொதுமக்களிடையே நல்ல ஒத்துழைப்பு உள்ளது. நடக்க முடியாத ஒரு விஷயத்தை தில்லி மக்கள் சாத்தியமாக்கியுள்ளனர். இந்த திட்டம் வெற்றியடையும் என்று நம்புகிறேன் என்று கூறினார்.

ஒற்றைப்படை எண் வாகனங்கள் மட்டுமே இன்று சாலைகளில் இயக்கப்பட வேண்டும் என்பதால் இரட்டைப் படை எண் கொண்ட வாகனங்கள் ஒரு சில மட்டுமே சாலைகளில் ஓடின. இந்த வாகனக் கட்டுப்பாடு கட்டாயமாக்கப்படும் போது அதுவும் இருக்காது என்று கூறப்படுகிறது.

-http://www.dinamani.com

TAGS: