பதன்கோட் விசாரணைக்கு உதவ ரெடி.. மோடிக்கு போன் போட்டு உறுதியளித்த நவாஸ் ஷெரிப்

nawaz-sharif-modiசண்டிகர்: பதன்கோட் தாக்குதல் தொடர்பான விசாரணையில் ஒத்துழைப்பு அளிப்பதாக பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் இந்திய பிரதமர் நரேந்திரமோடிக்கு உறுதியளித்துள்ளார்.

பஞ்சாப் மாநிலம் பதன்கோட்டிலுள்ள இந்திய விமானதளத்தில் தீவிரவாதிகள் 4 நாட்கள் முன்பு ஊடுருவினர். இதையடுத்து பாதுகாப்பு படையினர்-தீவிரவாதிகள் நடுவே மோதல் ஏற்பட்டது.

இந்திய ராணுவத்தை சேர்ந்த 7 பேர் வீர மரணம் அடைந்த நிலையில், தீவிரவாதிகள் 6 பேர் சுட்டு கொல்லப்பட்டனர். இன்று பகல், பதன்கோட்டில் தேடுதல் வேட்டை நிறைவு பெற்றது.

இதனிடையே, இந்த தாக்குதலில் பாகிஸ்தானை சேர்ந்த தீவிரவாதிகள் ஈடுபட்டதற்கான ஆதாரங்களை, அந்த நாட்டு அரசுக்கு, இந்தியா அளித்திருந்தது. இந்த ஆதாரங்களை பரிசீலிப்பதாக பாகிஸ்தான் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், இன்று அந்த நாட்டு பிரதமர் நவாஸ் ஷெரிப், பிரதமர் நரேந்திரமோடிக்கு, தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, பதன்கோட் தாக்குதல் விசாரணை தொடர்பான அனைத்து உதவிகளையும் பாகிஸ்தான் செய்யும் என்று அவர் உறுதியளித்துள்ளார்.

tamil.oneindia.com

TAGS: