மேட்டூர் அணையில் கர்நாடகா கழிவுநீர் கலப்பதை தமிழக அரசு தடுக்க வேண்டும்: G.K.நாகராஜ்

mettur-dam-viewகொங்குநாடு ஜனநாயக கட்சியின் ஒருங்கிணைந்த சேலம் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் வி.எம்.ஜி & வி.எம்.கே திருமண மண்டபத்தில் இன்று (10.01.2016) நடைபெற்றது. இதில் அக்கட்சியின் மாநிலத் தலைவர் G.K.நாகராஜ் கலந்து கொண்டார்.

கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேட்டூர் அணைக்கு கர்நாடகாவிலிருந்து கழிவுகள் கலந்த நீர் வருவதால் அணைநீர்  துர்நாற்றம் வீசுகிறது.கழிவுகளை அகற்றி தூய்மைப்படுத்த வேண்டும்.மேலும் லட்சக்கணக்கான மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் மேட்டூர் அணை நீராதாரத்தில் கழிவுகள் கலக்காமல் தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சேலம் மாநகரத்தில் அனைத்து சாலைகளும் குண்டும்,குழியுமாக உள்ளது.பாதாள சாக்கடை திட்டத்தை விரைவாக நிறைவேற்றி சாலையை போர்க்கால அடிப்படையில் செப்பனிட வேண்டும்.

நகரின் மையப்பகுதியில் செல்லும் திருமணிமுத்தாறில் பல இடங்களில் கழிவுகள் தேங்கி தூர்வாரப்படாமல் உள்ளது.அதை சீர் செய்ய வேண்டும்.​​

சேலம் மாவட்டம் ஆத்தூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளுக்கு நீராதாரமாக விளங்குவது ஆத்தூர் கரியகோயில் மலையில் தொடங்கி வசிஷ்ட நதியுடன் ஓடிவரும் சிற்றாறான வெள்ளாறு சேலம், விழுப்புரம்,அரியலூர்,கடலூர் ஆகிய நான்கு மாவட்ட மக்களின் விவசாயத்திற்கான முக்கிய நீராதாரம்.இந்த நீர் அதிநவம் ஏரி, பெத்தநாயக்கன்பாளையம் பனை ஏரி,கொட்டவாடி ஏரி,அய்யனார் கோயில் ஏரி,ஆரகலூர் ஏரி,கோவிந்தம்பாளையம் பெரிய ஏரி,சார்வாய் ஏரி போன்ற ஏரிகளுக்கு முக்கிய நீராதாரமாக உள்ளது.கரியகோயில் அணையின் கதவுகள் எந்நேரமும் திறந்தே இருக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.உபரியாக வீணாகக் கடலில் கலக்கும் நீரை மட்டுமே அணையில் தேக்கி வைக்கலாம் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.22 ஆண்டுகளில் அணை குடிநீர் தேவைக்காக இரண்டு முறை திறக்கப்பட்டதே தவிர அணை திறக்கப்படவே இல்லை.சுமார் 25 ஆயிரம் ஏக்கரில் நடந்த பாக்கு,தென்னை விவசாயம் தற்போது அழிவுநிலையை எட்டிவிட்டது. இதற்கு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாவட்டத்திலுள்ள அனைத்து ஏரிகளும் தூர்வாரப்பட வேண்டும்.

பூசாரிபட்டி,தீவட்டிப்பட்டி,தொப்பூர் பகுதிகளில் சாமந்திப்பூ சாகுபடி நடைபெற்று வருகிறது.இப்பகுதிகளில் சென்ட் ஃபேக்டரி அமைத்து மலர் சாகுபடியை மேம்படுத்த வேண்டும்.

-http://www.nakkheeran.in

TAGS: