உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் அனைத்துலக சிறப்பு மாநாடு புதுச்சேரியில் ஆரம்பம்!

puthuchcheri_001உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம் கனடா தலைமையகமும் உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம் இந்தியாவும் இணைந்து 2016 ஜனவரி 16,17 (சனி, ஞாயிறு) ஆகிய இரண்டு நாள்களில் சிறப்பு மாநாட்டினைப் புதுச்சேரி வள்ளலார் சாலையில் உள்ள வேல். சொக்கநாதன் திருமண மண்டபத்தில் நடத்துகின்றன.

 “அயல்நாடுகளில் வாழும் தமிழர்கள் எதிர்நோக்கும் சவால்களும், வாய்ப்புகளும்” என்னும் மையப் பொருளில் மாநாடு நடைபெறுகின்றது.

புதுச்சேரியில் நடைபெறும் மாநாட்டினைப் புதுவை மாநில முதலமைச்சர் ந. ரங்கசாமி அவர்கள் தொடங்கிவைக்கின்றார். புதுவை அரசின் அமைச்சர்கள் பெ.இராஜவேலு, தி. தியாகராஜன், என்.ஜி.பன்னீர்செல்வம், பி.ஆர்.சிவா ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்க உள்ளனர்.

இந்நிகழ்வின் சிறப்பு விருந்தினர்களாக இலங்கைப் பாராளுமன்ற உறுப்பினர்கள் மாவை.சோ. சேனாதிராஜா, ஈஸ்வரபாதம் சரவணபவன், சிவஞானம் சிறீதரன், அரியநாயகம் கவிந்திரன் கோடீஸ்வரன், இலங்கை கல்வி இராஜாங்க அமைச்சர் வி.இராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொள்ள உள்ளனர்.

“அயல்நாடுகளில் வாழும் தமிழர்கள் எதிர்நோக்கும் சவால்களும் வாய்ப்புகளும்” என்னும் மையப்பொருளில் நடைபெறும் இந்த மாநாட்டுக்குப் புதுச்சேரி நாடாளுமன்ற உறுப்பினர் இரா. இராதாகிருஷ்ணன் தலைமை தாங்குகின்றார்.

உலகத் தமிழ்ப்பண்பாட்டு இயக்கத்தின் இந்தியத் தலைவர் மாலதி இராஜவேலு வரவேற்புரையாற்றுகின்றார். முனைவர் பாஞ்.இராமலிங்கம் மாநாட்டின் நோக்கவுரையாற்றுகின்றார்.

இந்த மாநாட்டில் தமிழ்த் தொண்டாற்றியவர்களை கௌரவிக்கும் முகமாக உலகத் தமிழ்க் கல்விக்காவலர், வைரத்தமிழர் என்னும் விருதுகள் வழங்கப்பட உள்ளது.

உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் மாநாட்டு மலரினைப் புதுச்சேரி முதலமைச்சர் ந.ரங்கசாமி வெளியிட, புரவலர் பொன். இராசேந்திரன், பொறியாளர் வேல்.சொ. இசைக்கலைவன் ஆகியோர் பெற்றுக்கொள்ள உள்ளனர்.

புதுச்சேரியில் நடைபெறும் இந்த மாநாட்டுக்கு வி.சு.துரைராஜா(கனடா), துரை. கணேசலிங்கம் (செர்மனி), வேணு செட்டியார்(பிரான்சு), நடராஜகுமார் (கனடா), செல்லையா சிவராஜலிங்கம்(சுவிசு), நாஞ்சில் பீட்டர்(அமெரிக்கா), லோகேந்திரலிங்கம்(கனடா), கனகசபை அரியரத்தினம்(பிரான்சு), சு.தியாகலிங்கம் (நார்வே),

கோபி இரமேஷ் (நெதர்லாந்து), பழமலை கிருஷ்ணமூர்த்தி (குவைத்து), எம்.இலியாஸ் (சிங்கப்பூர்), கா.பாலமுருகன் (ஜப்பான்), இரவிச்சந்திரன் மாணிக்கம் (கனடா), திருகேசன் மகேசன் (கனடா), தீஸ் பிள்ளை (தென்னாப்பிரிக்கா), மோகன் இராமகிருஷ்ணன் (கனடா),

பிரசாந்தன் (இலங்கை), அரச ரத்தினம் ஜீவநேசன்(இலங்கை), அலெக்சிஸ் தேவராஜ் (பிரான்சு), இராமசாமி சகாதேவன்(பிரான்சு), கிருஷ்ண கோபால் தர்மலிங்கம் (கனடா), இராஜசூரியர்(செர்மனி), சிவா கணபதி பிள்ளை(கனடா), இரா.திவாகரன் (யாழ்ப்பாணம்) ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்ற உள்ளனர்.

உ.த.ப.இக நிறைவு விழா எஸ்.ஜெகத்ரட்சகன் தலைமையில் நடைபெற உள்ளது. முனைவர் பாஞ்.இராமலிங்கம் விழா குறித்த அறிக்கை அளிப்பார். புலவர் சீனு.இராமச்சந்திரன் வரவேற்புரையாற்ற புதுச்சேரி சட்டப் பேரவைத் தலைவர் வ.சபாபதி(எ) கோதண்டராமன் கலந்துகொண்டு புதுவைக் குயில் என்ற நூலினை வெளியிட்டு உரையாற்ற உள்ளார்.

உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்க மாநாட்டில் திருவள்ளுவர் 2047, பாவேந்தர் 125 என்ற தலைப்புகளில் கவியரங்கம் நடைபெறுகின்றது. ஆய்வரங்கம், கருத்தரங்கம், தமிழர் தொல்லியல் விளக்கும் கண்காட்சி, தமிழர் கணக்கியல் காட்டும் கண்காட்சி நடைபெற உள்ளன.

உ.த.ப. இயக்கத்தின் சிறப்புப் பேரவைக் கூட்டம் நீதியரசர் தாவீதன்னுசாமி தலைமையில் நடைபெறுகின்றது.

முனைவர் சோ. சீனுவாசன், முனைவர் வீ. செல்லப்பெருமாள், முனைவர். மு.இளங்கோவன், தியாகி அப்துல் மஜீத், சுந்தர இலட்சுமி நாராயணன், முனைவர் கலியன் எத்திராசன், முனைவர் இல.சுந்தரம், முனைவர் ச.ஆரோக்கியநாதன்,

முனைவர் சி.சத்தியசீலன், முனைவர் நா.இளங்கோ, முனைவர் வெங்கட சுப்புரய நாயகர், ஆனந்த பாலயோகி பவனானி, பேராசிரியர் இரா.ச. குழந்தைவேலனார், அருள்வேந்தன் பாவைச்செல்வி, கவிமாமணி சிங்கார. உதயன் ஆகியோர் சிறப்பு ஆய்வுரைகள் வழங்க உள்ளனர்.

-http://www.tamilwin.com

|

TAGS: