பிறருடைய பாரம்பரியம் மற்றும் நம்பிக்கைகளுக்கு நாம் மதிப்பளிக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார். அவ்வாறு இல்லாவிட்டால் வளர்ச்சிக்கு தடை ஏற்படும் என்றும் அவர் கூறினார்.
சுவாமி விவேகானந்தர் பிறந்தநாளை ஒட்டி சத்தீஸ்கர் மாநிலம், ராய்ப்பூரில் தேசிய இளைஞர்கள் திருவிழா செவ்வாய்க்கிழமை தொடங்கியது. இந்த விழாவில் காணொலிக் காட்சி மூலம் பிரதமர்
மோடி ஆற்றிய உரை வருமாறு:
பல வேறுபாடுகளைக் கொண்ட நாட்டில் நாம் வாழ்கிறோம். அது நமது மிகப் பெரிய பலமும் கூட. நல்லிணக்கம் என்பதும் நமது ஒற்றுமைக்கு பலமாக இருக்கிறது.
நாம் நல்லிணக்கத்தை கடைப்பிடிக்கா விட்டால், வளம் என்பதை நம்மால் உருவாக்க இயலாது. பிறருடைய பாரம்பரியம், நம்பிக்கை ஆகியவற்றுக்கு பரஸ்பரம் நாம் மதிப்பளிக்கவில்லை எனில், வளர்ச்சியை நோக்கிய பாதையில் தடை ஏற்பட்டு விடும்.
நாட்டில் அமைதி, ஒற்றுமை, நல்லிணக்கம் ஆகியவை இல்லையெனில் வளம், செழிப்பு, வேலைவாய்ப்பு ஆகிய அனைத்தும் அர்த்தமற்றதாகி விடும். எனவே அமைதி, ஒற்றுமை, நல்லிணக்கம் ஆகியவற்றைக் காக்க வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது.
நூற்றுக்கணக்கான மொழிகள், பல்வேறு மதங்கள் என பல வேறுபாடுகள் இருப்பினும் இங்கு அமைதி நிலவுகிறது என்பதை நாம் உலகுக்கு உணர்த்தியிருக்கிறோம். அதுதான் நமது கலாசாரம். அதைத்தான் நாம் பாதுகாக்க வேண்டும் என்றார் மோடி.
-http://www.dinamani.com
“பல வேறுபாடுகளைக் கொண்ட நாட்டில் நாம் வாழ்கிறோம். அது நமது மிகப் பெரிய பலமும் கூட. நல்லிணக்கம் என்பதும் நமது ஒற்றுமைக்கு பலமாக இருக்கிறது.” இத்தகைய எண்ணம் நமது நாட்டுத் தலைவர்களுக்கும் தேவை.
பிறருடைய பாரம்பரியம், நம்பிக்கைகளுக்கு மதிப்பளிக்க வேண்டும்ன்னு சரியாய் சொன்னிங்க தலைவரே! அதே வேளையிலே மத்தவங்க உரிமையையும்,உடமையும் மதிபளிக்க வேண்டும்.இப்ப பாருங்க தமிழ் மண்ணை பக்கத்திலே உள்ள திருட்டு நாதாரிங்க எல்லை கோட்டை மாத்தி பல ஆயிரம் எக்டர் நிலத்தை ஏப்பம் விட்டுட்டானுங்க! அதை எல்லாத்தையும் நல்ல படியா மீண்டும் தமிழனிடமே ஒப்படச்சா உங்களுக்கு ரொம்ப உபகாரமா போகும்! இல்லைனா அதுவே பெரிய புகம்பமா வெடுச்சி நாளைக்கு தனி தமிழர் நாடுன்னு பிரிக்க வேண்டி வரும்,அப்புறம் உங்க விருப்பம்!!!